பக்கம் எண் :

162தமிழியற் கட்டுரைகள்

  கோண் = 1. வளைவு. "கோணார்பிறை" (திருவாச 16:5). 2. கொடுங்கோன்மை. (திவா.). 3. கோணம் "முக்கோ ணிவர்தரு வட்டம்" (குற்றா: தல. பராசத். 3). 4. கூன்
  கோணன் = கூனன் (பிங்.).
  கோண் - ஒ.நோ: Gk. gonia, angle.
  கோண் - கோணம் = 1. மூலை. "கோண மொத்திலங்கோர் முழத்தினின்" (திருவாலவா. 15:2). 2. ஒதுக்குப்புறமான இடம். கோணம் - வ. கோண.
  கோணம் - காணம் = 1. வளைந்த கொள்ளுக்காய் 2. கொட்பயறு (பாண்டிவழக்கு).
  கோண் - கோணை = 1. வளைவு. 2. கோணல் 3. கொடுமை. (அக.நி.) 4. தொல்லை. "கோணை பெரிதுடைத்தெம் பெருமானைக் கூறுதலே" (திவ் திருவாய். 2 : 5 : 10.)
  கோணை - கோணையன் = மாறுபட்ட குணஞ் செயல் கருத்துடை யவன்.
  கோண்-கோடு. ஒ.நோ: பாண்-பாடு.
     கோடுதல் = 1. கோணுதல், 2. வளைதல். "கொடும் புருவங் கோடா மறைப்பின்" (குறள். 1086) 2. நெறி அல்லது நடுநிலை தவறுதல். "கோடாருங் கோடிக் கருவினைய ராகியார்ச் சார்ந்து" (நாலடி. 124), "கோடாமை சான்றோர்க் கணி" (குறள். 118). 3. சூழ்தல். 4. வட்டமாதல்.
     கோடு = 1 வளைவு. 2. வளைந்த சங்கு. "கோடு முழங் கிமிழிசை யெடுப்பும்" (பதிற்றுப். 50:25.). 3. பிறைமதி, "கோடுமிலைந்தான்" (திருக்கோ. 149). 4. விலங்கின் கொம்பு. "கோட்டிடையாடினை கூத்து" (திவ். இயற். திருவிருத். 21). 5. யானை மருப்பு (தந்தம்). "மத்த யானையின் கோடும்" (தேவா. 39: 1)6. மரக்கிளை. (பிங்) 7. யாழ்த்தண்டு. "மகர யாழின் வான்கோடு தழீஇ" (மணி 4: 56). 8. எழுத்தின் கொம்புக் குறியீடு. "விலங்கு பெற்றும் கோடு பெற்றும் புள்ளி பெற்றும்" (தொல். எழுத். 17, உரை), 9. மயிர்ச் சுருள்முடி. "குரற் கூந்தற் கோடு" (கலித். 72:20). 10. வளைந்த குளக்கரை. "கோடின்றி நீர் நிறைந்தற்று" (குறள். 523). 11. குளம். "கோடெலா நிறையக் குவளை மலரும்" (தேவா. 425:4). 12. ஆடைக்கரை. கொடுந்தானைக் கோட்டழகும்" (நாலடி. 131). 13. வரம்பு. (பிங்). 14. வரி. 15. வட்டாடும் கட்டம். "கோடின்றி வட்டாடல் கொள்வ தொக்கும்" (தாயு. நினை. 2). 16. காலவட்டம். "கலியுகக் கோட்டுநாள்" (T.A.S.H.P. 5). 17. நடுநிலை திறம்புகை. "கோடி றீக் கூற்றம்" (நாலடி. 5). 18. கொடுமை. கோடற வைத்த கோடாக் கொள்கையும்" (பதிற்றுப். 37:11). 19. வரம்பு போன்ற பக்கம். "கோடுய ரடுப்பு (புறம். 164).