மூன்றினும் முழங்கும்; ஆண்டிலும் இலையேல் வடமொழி வெளிபெற வழங்கும் என்க (இலக்-7) என்று இவர் கூறுகின்றார். “வடமொழி தமிழ்மொழி எனும் இரு மொழியினும் இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக” என்று இவர் உரைக்கின்றார் (இலக்-7). வடமொழி மீதிருந்த அளவுகடந்த பற்றின் காரணமாகத் தமிழ்மொழியை இகழவும் தொடங்கிவிடுகின்றார். ... தமிழ்நூற்கு அளவிலை; அவற்றுள் ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? அன்றியும் ஐந்து எழுத்தால் ஒருபாடை என்று அறையவும் நாணுவர் அறிவுடை யோரே (இலக் -7) என்று தமிழ்மொழியையும் நூல்களையும் இகழ்ந்து அறிஞர் பலருடைய வெறுப்பிற்கும், இகழ்ச்சிக்கும் ஆளாகிவிடுகின்றார். செங்கல்வராய பிள்ளை ‘தமிழ் உரைநடை இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் சாமிநாத தேசிகரைப்பற்றி, “இவர் சிறந்த தமிழறிஞராக இருந்தபோதிலும் தமிழ்மொழி, இலக்கியங்களைப்பற்றி, சில துறைகளில் மிகவும் குறுகிய நோக்கம் உடையவராகக் காணப்படுகின்றார்”1 என்று கூறுகின்றார். இவரது கொள்கைகள் சிலவற்றைத் தமிழறிஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் தமிழ் மொழியின் வரலாறு என்னும் நூலில் மறுத்துள்ளார். பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரைப் பிள்ளை, சரித்திரம் பேசுகிறது என்னும் நூலில் (1962, பக்-77) பின்வருமாறு சாமிநாத தேசிகரைக் கண்டித்துள்ளார்: “இந்தியாவிலேயே சமஸ்கிருத ஆதிக்க வாதிகளின் தலைவர் என்று, இலக்கணக் கொத்து ஆசிரியரான சாமிநாத தேசிகரைக் கூறலாம். தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் பொதுவான எழுத்துகளைச் சமஸ்கிருத எழுத்துக்கள் என்று அவர் முடிவு செய்தார். தமிழ்ச் சிறப்பு எழுத்துக்களான ற ன ழ எ ஒ என்ற ஐந்துமே தமிழ் எழுத்துக்கள் என்று கொண்டார். “ஐந்தெழுத்தால் 1. “Although he (Swaminatha Desikar) was a great Tamil Scholar. he seems to have had very crooked notions in some cases, about his own Tamil language and literature” - Chengalvaraya Pillai. History of the Tamil Prose literature (1928) p.33. |