பக்கம் எண் :

689நோக்கு

     இவ்வாறே உரையாசிரியர்களும் அமுதத் தமிழ்க் கடலில் மூழ்கி
இன்புற்று, தாம் சுவைத்த பாடல்களைத் திரட்டி எடுத்துத் தருகின்றனர்.
அவர்கள் தரும் மேற்கோள் செய்யுட்கள் அவர்களுடைய செழுமையான
அறிவு நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், அவர்களின் தமிழார்வச் சிறப்பையும்
நமக்கு அறிவிக்கின்றன.

     சிறந்த பாடல்களை மேற்கோள் தருபவர்கள், பல சிறந்த நூல்களில்
மூழ்கித் திளைத்திருக்க வேண்டும்; கற்றவற்றை எல்லாம் நினைவில்
நிலைபெறுத்த வேண்டும்; அவற்றை ஆராய்ச்சித் திறனுடன்
வெளியிடவேண்டும்; தேவையான இடத்தில் தக்க நேரத்தில் ஏற்ற பாடல்
வந்து துணைபுரிய வேண்டும். இத்தகைய அரிய திறன்கள் பல வாய்க்கப்
பெற்ற உரையாசிரியர்கள் காட்டிய மேற்கோள் பாடல்கள் யாவும், மிகச்
சிறந்தவையாய் உள்ளன.

இரண்டாம் வகை

    “மொழி என்னும் கட்டிடத்துக்கு இலக்கணம் அடித்தளம் என்றால்,
காப்பியங்கள் தூண் என்றால், நாடக நூல்கள் மேன்மாடங்கள் என்றால்,
நாடோடிப் பாடல்கள் காற்றுவரும் காலதர்கள் என்றால், தனிப்பாடல்கள்
படிக்கட்டுக்கள் என்று சொல்லவேண்டும்”.*

     ஒவ்வொரு தனிப்பாடலும் சிறந்ததோர் சிறுகதையாகும். சிறுகதைக்கு
உரிய கரு மிகச் சிறப்பாய்ச் சிறு கதையில் அமைந்துள்ளது. ஆதலின்
கற்பவரின் கற்பனைத் திறனை வளர்த்து இன்பமூட்டும் பணியைத்
தனிப்பாடல்கள் செய்து வருகின்றன. அத்தகைய தனிப்பாடல்கள் பலவற்றை
உரையாசிரியர்கள் தம் உரைகளில் எடுத்துக்கூறி, இலக்கியப் பணியாற்றி
வந்துள்ளனர்.

மூன்றாம் வகை

    உரையாசிரியர்கள் தாமே இயற்றிய செய்யுட்களும் உரைகளில்
இடம் பெறுகின்றன. உரைச் சூத்திரம், உரைச் செய்யுள் ஆகியவை
உரையாசிரியர்கள். இயற்றியவையாம். இரண்டொரு செய்யுட்களையே
அவர்கள் இயற்றி இருப்பினும் அவை சிறப்பு வாய்ந்தவை என்பதில்
ஐயமில்லை.

     டாக்டர் உ.வே.சா. “ஒரு புலவனுடைய பெருமையை ஆயிரக்கணக்கான
பாடல்களால் அறிந்து கொள்ள வேண்டும்


 * எந்தச் சிலம்பு (1964) பக்கம் 110. டாக்டர் வ.சுப. மாணிக்கம்.