பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 139

     ஆங்கிலேயர்  ஆதிக்கத்திலிருந்து  மட்டுமல்லாமல், ராஜாஜி அவர்கள்
மிகுந்த  வேதனையுடன்  வருணிக்கும்   ஆங்கிலம்  படித்த  இந்தியர்களின்
செல்வாக்கிலிருந்தும்  மக்களை   விடுவிக்கவே  தேசியக்  கல்வித்   திட்டம்
தோற்றுவிக்கப்பட்டது.

     இந்தக்  கட்டத்தில்தான்  முன்  எப்போதையும்விட அதிகமாகப் பொது
மக்களை   அணுகியது   காங்கிரஸ்.  காங்கிரசின்  கொள்கைகள்,  வேலைத்
திட்டங்கள்,   போர்  முறைகள், பிரச்சார  முறை  ஆகியவெல்லாம்  எளிய
மக்களைக்  கவரும்  முறையிலே  அமைந்தது. அதனால், சாதாரண மக்களும்
காங்கிரசில்  சேர்ந்தனர்.  இந்திய  விடுதலைப்  போர்  உண்மையான மக்கள்
இயக்கமாக  மலந்ததால், தாய் மொழியில் அற்ப சொற்ப அறிவுடையவர்களும்
விடுதலைப்  பாசறையிலே   முன்னணி   வீரர்களாகி,   பேச்சாளர்களாகவும்
எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் மலர்ந்தனர்.

மொழி வழி மாநிலம்

      காங்கிரஸ்   மகாசபையின்   மாநிலக்   கிளைகள்  அந்தந்த  மாநில
மொழியிலேயே    நடத்தப்பட்டதும்    இந்த    மறுமலர்ச்சிக்கு   முக்கியக்
காரணமாகும்.    பொதுக்கூட்டங்களிலும்   மாநில   அளவில்   நடைபெறும்
மாநாடுகளிலும்  காங்கிரஸ்   பெருந்தலைவர்கள்   தத்தம்   தாய்மொழியிலே
பேசலாயினர்.  இதனால்,  உழைப்பிலும்  தியாக  உணர்ச்சியிலும் மிக்கவர்கள்
ஆங்கில  மொழியில் புலமையில்லாமலே முன்னணிக்கு வர முடிந்தது. வெறும்
படிப்பும் பணமும் பகட்டும் மதிப்பிழந்தன.

     காந்தியடிகள்,  நண்பர்களோடு   உரையாடும்போதும்   சரி ;   பொது
மேடைகளில்  பேசும்போதும்   சரி;   அன்னிய  மொழியான  ஆங்கிலத்தில்
பேசுவதைத்  தவிர்த்து,  பெரும்பாலும்  நாட்டின்  பொது  மொழியாக அவர்
வலியுறுத்தி வந்த இந்தி மொழியிலேயே பேசி வந்தார்.

     நாகபுரி   காங்கிரஸ்   மகாசபையிலே   மாகாண   காங்கிரஸ்  கமிட்டி
களை  மொழி   அடிப்படையில்   திருத்தி    அமைக்க    வேண்டுமென்று
தீர்மானித்தப்படி,  1921   ஆகஸ்டு   2ல்   தமிழ்நாடு  காங்கிரஸ்    கமிட்டி
அமைக்கப்   பெற்றது.  இந்த   மாறுதலுக்கு   முன்பு  தமிழ்,     தெலுங்கு,
மலையாளம்,   கன்னடம்    ஆகிய    நான்கு    மொழிப்    பிரதேசங்கள்
கொண்ட   பழைய   சென்னை  ராஜ்யம்  முழுவதற்கும்   ஒரே    மாகாண