இருந்த லார்டு ரிப்பன் இந்தியமொழிப் பத்திரிகைச் சட்டத்தை அகற்றினார்.
ஆனால், அதன் பின்னும் வேறு வகையான கெடுபிடிகள் நீடித்தன. அரசினரின் கெடுபிடிகளைத் தாங்கிக் கொள்ளவும் இயலாமல், பணிந்து
போகவும் விரும்பாமல், தீவிர தேசபக்தர்கள் நடத்தி வந்த பத்திரிகைகள்
பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வெளியேறி, சமஸ்தானங்களில் குடிபுகுந்தன.
பிரிட்டிஷ் ஆதிக்கம் விட்டுவிடுமா? 1891ல் 'சமஸ்தான பத்திரிகைச் சட்டம்'
ஒன்றைக் கொண்டுவந்து, இந்திய மொழிப்பத்திரிகைகளை ஒடுக்க முயன்றது.
இப்படி, 1857 முதல் தொடர்ந்து அரை நூற்றாண்டு காலம் இந்திய
மொழிப்பத்திரிகையுலகில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் அடக்குமுறைக்
கொடுமைகள் தாண்டவமாடின. இதனால், 'அமிர்த பஜார்' என்ற வங்கமொழி
நாளேடு ஒரே இரவில் ஆங்கில மொழிப்பத்திரிகையாக மாற்றப்பட்டுவிட்டது.
குற்றம் ஒருவர் புரிய..
1908, 1910 ஆகிய ஆண்டுகளில் கூடிய காங்கிரஸ் மகாசபைகளிலே,
இந்திய மொழிப் பத்திரிகைகளுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்தார்
இழைத்துவரும் கொடுமைகளைக் கண்டித்தும், இந்திய மொழிப் பத்திரிகைச்
சட்டத்தைக் கைவிடக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பெற்றன.
இதனால் எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை.
ஒரு பத்திரிகை தொடங்கும்போதே அதனிடம் ஜாமீன் தொகை
கேட்பதும், பின்னர் ஏதேனும் குற்றங்காட்டி, அந்த ஜாமீன் தொகையைப்
பறிமுதல் செய்து, திரும்பவும் முன்னர் கட்டியதை விடவும் அதிக அளவு
ஜாமீன் கேட்பதும் வழக்கமாகி வந்தது. பத்திரிகையில் வெளியிடுவதற்கான
அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டன.
தமிழ்ப் பத்திரிகை உலகிலும் அரசினரின் அடக்குமுறை பேய்க்
கூத்தாடியது. 1919ல் திரு.வி.க.வை ஆசிரியராகக் கொண்டு 'தேச பக்தன்'
நாளிதழ் வெளிவந்தபோது, அதனிடம் ரூபாய் 1000 ஜாமீன் பெறப்பட்டது.
பின்னர், அதனைப் பறிமுதல் செய்து, மேலும் ஐயாயிரம் ஜாமீன்
பெறப்பட்டது.