பக்கம் எண் :

விவாக முயற்சி 111

என்று நினைத்திருந்தேன். கல்விச்செல்வமுள்ளவர்களுள்ளும் அந்த
இரண்டு வகையினர் இருப்பதை அன்றுதான் நான் முதலில் அறிந்து
கொண்டேன்.

அத்தியாயம்-20

விவாக முயற்சி

வெண்மணியில் இராமாயணப் பிரசங்கம் நிறைவேறியவுடன் நாங்கள்
மீண்டும் குன்னத்திற்கே வந்து சேர்ந்தோம். எங்களுக்குத் தலைமையான
பற்றுக்கோடாக அந்த ஊர் இருந்தது. கணக்குப் பிள்ளை சிதம்பரம்பிள்ளையும்
அவருடைய அன்பர்களும் குன்னத்தில் எங்களுக்கிருந்த பற்றைத் தங்கள்
ஆதரவினால் பின்னும் உறுதி பெறும்படி செய்து வந்தனர்.

சிதம்பரம்பிள்ளையினிடம் பல ஏட்டுச்சுவடிகள் இருந்தன. அவற்றைத்
தனியே ஓர் அறையில் தொகுத்து வைத்துக் கருத்துடன் அவர் பாதுகாத்து
வந்தார். அச்சுவடிகளிற் சிலவற்றை நான் சில சமயங்களிற் படித்துப்
பார்ப்பேன். ஒருநாள் பெரும்புலியூர் (பெரம்பலூர்)ப் பள்ளிக்கூடத்துத்
தலைமை உபாத்தியாயராகிய ராயர் ஒருவர் குன்னத்திற்கு வந்திருந்தார். அவர்
தமிழ்ப்பயிற்சி உடையவர். நான் தமிழ் நூல்களைப் படிப்பதையும் புஸ்தகங்கள்
இல்லாமல் துன்புறுவதையும் உணர்ந்தார். முத்தப்பிள்ளையிடம் இரவலாகப்
பெற்றிருந்த திருக்குறள் உரைப்புஸ்தகத்தை நான் படித்துக் கொண்டிருப்பதைப்
பார்த்து அந்தப் புஸ்தகம் இரவலென்பதைத் தெரிந்து கொண்டு, “என்னிடம்
இந்தப் புஸ்தகம் ஒன்று இருக்கிறது; அங்கே வந்தால் தருகிறேன்” என்று
சொன்னார். அவருடைய இரக்கத்தைக் கண்டு நான் ஆறுதலுற்றேன்.
குன்னத்தில் இருந்த காலத்தில் சில முறை பெரும்புலியூர் போக முயன்றும்
அங்ஙனம் செய்ய இயலவில்லை. முத்தப்பிள்ளையின் புஸ்தகத்தை அவரிடமே
கொடுத்துவிட்டேன்.

செய்யுள் இயற்றல்

சதகங்கள், மாலைகள் முதலிய நூல்களைப் படித்துப் படித்து உண்டான
பழக்கத்தால் அவற்றின் ஓசையைப் பின்பற்றி நான் செய்யுள் இயற்றத்
தொடங்கினேன். எதுகை மோனைகள் அமைய வேண்டுமென்பது பழக்கத்தால்
ஒருவாறு தெரிய வந்தது. ஆனால் அசை சீர் தளை தொடை முதலிய
பாகுபாடுகளோ வேறு வகையான