பக்கம் எண் :

என் கல்யாணம் 129

நிரூபித்தார். என் தந்தையாருக்கு அந்த மழையால் உண்டாகிய கலக்கம்
சாஸ்திரிகளுடைய வார்த்தைகளால் நீங்கவே உள்ளம் குளிர்ந்தது. நாங்கள்
உத்தமதானபுரத்திற்குப் புறப்பட்டு விட்டோம்.

கிருகப்பிரவேசம் சிறப்பாக நிகழ்ந்தது. கல்யாணச் சிறப்புக்கு மேல்
கிருகப் பிரவேசச் சிறப்பு அதிகமாக இருந்தது. “ஊரை விட்டுப்
போய்விட்டமையால் இவர்களுக்குச் சௌகரியம் அதிகமாயிற்றே ஒழியக்
குறைவொன்றுமில்லை” என்ற கருத்து ஊராருக்கு உண்டாயிற்று.

வரகூர் கோபால பாகவதர்

கல்யாணம் நிறைவேறிய பிறகு சில நாட்கள் உத்தமதானபுரத்தில்
தங்கியிருந்தோம். இடையே அருகில் ஓர் ஊரில் என் வேட்டகத்து அம்மான்
வீட்டில் நடைபெற்ற விசேஷத்திற்கு நானும் வேறு சிலரும் போயிருந்தோம்.
என் தந்தையார் மாத்திரம் ஊரில் இருந்தார். அப்போது உத்தமதானபுரத்தில்
எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு கல்யாணம் நடந்தது. அக்கல்யாணத்துக்கு
வரகூரிலிருந்து கோபால பாகவதர் என்னும் பெரியார் தம் பரிவாரத்துடன்
வந்திருந்தார். அவர் ஹரிகதை செய்வதில் மிக்க புகழ் பெற்றவர். சிறந்த
ஆசார அனுஷ்டானமுடையவர். அவர் அக்கல்யாணத்தில் ஹரி கதை
நடத்தினார். அதனைக் கேட்ட என் தந்தையார் நான் அப்போது அங்கே
இல்லாதது குறித்து வருந்தினார். நான் வந்தவுடன், “கோபால பாகவதர் கதை
பண்ணினார். நீ கேட்டிருந்தால் பல விஷயங்களைக் கிரகித்திருப்பாய்”
என்றார். பாகவதர் அன்றும் இருந்தார். நான் சென்று அவரைத் தரிசித்து
நமஸ்காரம் செய்தேன். பளபளவென்ற அவர் திருமேனியும் விபூதி தாரணமும்
துளசிமணி மாலையும் தூய உடையும் என் கண்களைக் குளிர்வித்தன.
அவருடன் இருபது முப்பது பாகவதர்கள் வந்திருந்தனர். எல்லோரும்
தூய்மையும் பக்தியும் உருவெடுத்தாற்போல் தோன்றினார்கள்.

கோபால பாகவதர் என்னைச் சில கீர்த்தனங்கள் பாடச் சொல்லிக்
கேட்டார். சில தமிழ்ச் செய்யுட்களையும் அவர் விருப்பப்படி சொல்லிக்
காட்டினேன். அவர் மனமகிழ்ந்து என்னை ஆசீர்வாதம் செய்தார்.

மஞ்சள் வேஷ்டியுடன்

சில தினங்கள் உத்தமதானபுரத்தில் இருந்தபிறகு என் தந்தையாரும்
தாயாரும் நானும் குன்னம் வழியாக மீட்டும்