பக்கம் எண் :

திருப்பெருந்துறை 349

சுவாமியின் திருநாமம் ஆத்மநாதரென்பது; அம்பிகைக்குச்
சிவயோகாம்பிகை என்பது திருநாமம். இவ்விருவரும் அரூபமாக அங்கே
கோயில் கொண்டிருத்தலை என் ஆசிரியர்,

“தூயநா மத்தருவ முருவமெவை யெனினுமொரு
தோன்றல் போன்றே
பாயநா னிலவரைப்பின் கணுமமர்வா ளெனல்தெரித்த
படியே போல
ஆயநா தங்கடந்த வான்மநா தக்கடவுள்
அமர்தற் கேற்ப
மேயநா யகிசிவயோ காம்பிகைதன் விரைமலர்த்தாள்
மேவி வாழ்வாம்”

என்று திருப்பெருந்துறைப் புராணத்திற் புலப்படுத்தியிருக்கிறார்.
‘அருவம் உருவம் என்னும் கோலங்களில் எந்தக் கோலத்தில் சிவபெருமான்
எழுந்தருளியிருக்கிறாரோ அக்கோலத்தில் இப்பூமியிலும் அம்பிகை
எழுந்தருளியிருப்பதை வெளிப்படுவதைப் போல, நாத தத்துவங் கடந்து நின்ற
ஆத்மநாத சுவாமி அரூபமாக எழுந்தருளியிருத்தற்கு ஏற்றபடி தானும்
அரூபத்திருமேனி கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவயோகாம்பிகையின்
திருவடிகளை விரும்பி வாழ்வோமாக’ என்பது இதன் பொருள்.

மாணிக்க வாசகர்

அங்கே மாணிக்க வாசகர் உபதேசம் பெற்றமையாலும் அவர்
பொருட்டுச் சிவபெருமான் சில திருவிளையாடல்களைச் செய்தமையாலும் அந்த
ஸ்தலத்தில் அவருக்கு விசேஷமான பூஜை, உத்ஸவம் முதலியன நடைபெறும்.
உத்ஸவங்களில் மாணிக்க வாசகருக்கே முக்கிய ஸ்தானம் அளிக்கப்பெறும்.

மாணிக்கவாசகர் அத்தல விருக்ஷமாகிய குருந்த மரத்தின் அடியில்
உபதேசம் பெற்றார். அவ்விடத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார்;
குருமூர்த்தியென்று அப்பெருமானை வழங்குவர். அவர் பொருட்டுச்
சிவபெருமான் குதிரைச் சேவகராயினர். அதற்கு அடையாளமாக
அத்திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள கனகசபையென்றும்
மண்டபத்தில் இறைவர் அசுவாரூடராக எழுந்தருளியிருக்கிறார். அதற்குக்
குதிரை ஸ்வாமி மண்டபம் என்ற பெயர் பிரசித்தமாக வழங்குகிறது.
அக்கோயிலில் பல இடங்களில் மாணிக்கவாசகர் திருவுருவங்கள்
அமைந்துள்ளன. அம்பிகையின் சந்நிதிக்கு நேரே மாணிக்கவாசகர் சந்நிதி