பக்கம் எண் :

காலேஜில் முதல் நாள் அனுபவம் 501

பொருள் சொல்லும் போது, உலகத்திலே பணக்காரர்கள் இறுமாப்பினால்
ஏழைகளை அவமதிப்பதையும் ஓர் உதவி செய்துவிட்டால் அதைத் தாங்களே
பெரிதாகச் சொல்லி அவ்வுதவி பெற்றவர்களை இழிவாகப் பேசி, ‘இந்த
உதவியை இவரிடம் பெறும்படி நம்மைத் தெய்வம் ஏன் வைத்தது!’ என்று
அவ்வேழைகள் தம்மைத் தாமே நொந்து கொள்ளும்படி செய்வது
முதலியவற்றையும் எடுத்துரைத்தேன். ஒரு பாடலைப் பாடம் சொல்லும்போது,
வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் மாத்திரம் சொல்லி நிறுத்தினால்
கேட்பவர்களுடைய மனம் அதில் பொருந்தாது. அதனால், உபமானங்களையும்,
உலக அனுபவச் செய்திகளையும் எடுத்துச் சொல்லி மாணாக்கர்களுடைய
மனத்தைப் பாட்டின் பொருளுக்கு இழுத்தேன்.

ஐந்து பாடல்கள் அந்த மணியில் முடிந்தன. இடையே, யாசகம்
செய்வதனால் உண்டாகும் இழிவைப் பற்றி நான் மேற்கோள்கள் சொன்னபோது
செட்டியார் குசேலோபாக்கியானத்திலிருந்து, “பல்லெலாந் தெரியக் காட்டி”
என்னும் செய்யுளை எடுத்துச் சொல்லி அவ்விஷயத்தைப் பின்னும்
விளக்கினார்.

இரண்டாவது பாடம்

மணி அடித்தவுடன் நான் முன்னே வேறு வகுப்பிற்குச் சென்றேன்.
செட்டியார் பிள்ளைகளைத் தனியே அழைத்து, நான் பாடம் சொன்னதைப்
பற்றி அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்டார். பிள்ளைகள் தங்களுக்கு
மிக்க திருப்தியாக உள்ளது என்று தெரிவித்தார்கள்.

“நான் மிகவும் கஷ்டப்பட்டு இவரை அழைத்து வந்திருக்கிறேன்.
இவரிடத்தில் மரியாதையாக இருங்கள். என்னிடம் இருப்பது போலவே
இவரிடமும் இருக்க வேண்டும்” என்று செட்டியார் அவர்களை நோக்கிச்
சொல்லி விட்டுச் சிலரை இன்னார் இன்னாரென்று எனக்குப் பின்பு
தெரிவித்தார்.

அடுத்த மணியில் பி. ஏ. முதல் வகுப்புக்குப் பாடம் சொல்லப்
போனேன். செட்டியாரும் வேறு சில ஆசிரியர்களும் உடன் வந்தார்கள்.
சேஷையர் விருப்பத்தின்படி ஸம்ஸ்கிருத பண்டிதராகிய பெருகவாழ்ந்தான்
ரங்காசாரியரும் வந்தார். அங்கே இராமாயணத்தில் அகலிகைப் படலம் பாடம்
சொல்லத் தொடங்கினேன். முதற் பாட்டைச் சகானா ராகத்தில் படித்துவிட்டுப்
பொருள் சொல்லலானேன்.

நான் பாடம் சொல்லும் போதெல்லாம் பிள்ளைகள் என்னையே
பார்த்துக் கவனித்து வந்தார்கள். செட்டியாரோ அவர்களில்