பக்கம் எண் :

எனக்கு உண்டான ஊக்கம் 503

      பிறகு, பி. ஏ. இரண்டாவது வகுப்புக்குச் சென்றோம். அந்த வகுப்பில்
இருந்தவர்கள் செட்டியாரிடம் மூன்று வருஷங்கள் பாடம் கேட்டவர்கள். அந்த
வருஷம் பரீக்ஷைக்குப் போக வேண்டியவர்கள். புதுக்கோட்டையில்
பிரின்ஸிபாலாக இருந்த எஸ். ராதா கிருஷ்ணையர். கோயம்புத்தூரில் சிறந்த
வக்கீலாக விளங்கிய பால கிருஷ்ணையர், திருநெல்வேலி ஹிந்து காலேஜில்
ஆசிரியராக இருந்த சீதாராமையர் முதலிய பன்னிரண்டு பேர்கள்
அவ்வகுப்பில் இருந்தார்கள்.

      கம்ப ராமாயணத்தில் நாட்டுப் படலம் பாடமாக இருந்தது. “வாங்கரும்
பாத நான்கும் வகுத்தவான் மீகியென்பான்” என்ற பாடலைச் சொல்லிப்
பொருள் கூறிவிட்டு இலக்கணக் கேள்விகள் கேட்கலானேன்.

      ஒரு மாணாக்கரை, “வாங்கரும் பாதமென்பதிலுள்ள அரும்பாதம்
என்பது என்ன சந்தி?” என்று கேட்டேன். அவர், “பெயரெச்சம்” என்றார்.
பண்புத் தொகையாகிய அதைப் பெயரெச்சமென்று பிழையாகச் சொல்லவே,
அங்கிருந்த செட்டியார் உடனே தலையில் அடித்துக்கொண்டு, “என்ன
சொல்லிக் கொடுத் தாலும் சில பேருக்கு வருகிறதில்லை. மூன்று வருஷம்
என்னிடம் பாடம் கேட்டவன் இப்படிச்சொன்னால் எனக்கல்லவா அவமானம்?”
என்று அந்த மாணாக்கரை நோக்கிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து,
“தள்ளாத வயசில் நான் எவ்வளவு சொல்ல வேண்டுமோ அவ்வளவு
சொல்லாமல் இருந்திருப்பேன். அதனால் தான் வேலையை விட்டு நீங்குகிறேன்.
நீங்கள் நன்றாகச் சொல்லிக் கொடுங்கள்” என்றார்.

      மேலே நான் பாடம் சொன்னேன். மணி அடித்தது. உடனே நாங்கள்
காலேஜை விட்டுப் புறப்பட்டோம்.

      முதல் நாளாகிய அன்றே எனக்கு, ‘நம் வேலையை நன்றாகச்
செய்யலாம்’ என்ற தைரியம் பிறந்தது. பிள்ளைகளுக்கும், மற்ற
ஆசிரியர்களுக்கும், எல்லோருக்கும் மேலாகத் தியாகராச செட்டியாருக்கும்
நான் அந்தப் பதவிக்கு ஏற்றவனென்ற திருப்தி உண்டாயிற்று.

அத்தியாயம்-84

எனக்கு உண்டான ஊக்கம்

      இரண்டாம் நாள் (17-2-1880) நான் வழக்கப்படி காலேஜு க்குச் சென்று
பாடங்களை நடத்தினேன். தியாகராச