பக்கம் எண் :

புதிய ஊக்கம் 601

எடுத்து ஒவ்வொரு நூலிலும் 95 என்ற எண்ணுள்ள பாடலை எடுத்துப்
பார்த்தேன். அப்படிப் பார்த்தபோது நான் பார்த்த சுவடி புறநானூற்று உரைப்
பிரதியென்று தெரியவந்தது. ஆகவே அந்தச் சுவடியிலிருந்து
கிடைத்தவற்றையெல்லாம் புறநானூறென்ற தலைப்பிட்டு எழுதிக் கொண்டேன்.
மற்ற ஏடுகளையும் படித்தேன். தொடர்ந்து திருக்கோவையாரையும், பதினெண்
கீழ்க் கணக்கையும் அழுத்தமாக வாசித்துப் பல மேற்கோள்களைத் தெரிந்து
கொண்டேன். கேமசரியார் இலம்பகத்துக்கு மேல் பதிப்பித்த பகுதிகளில் அடிக்
குறிப்பில் அந்த மேற்கோள்களைப் புலப்படுத்தினேன். நச்சினார்க்கினியர்
மேற்கோள் காட்டும் பழைய நூற்பகுதிகளை இன்னநூலிலுள்ளன வென்று
காட்டுவதோடு அவர் காட்டிய பகுதிக்கு முன்னும் பின்னும் சில அடிகளையும்
சேர்த்துப் பதிப்பித்தேன். வெறும் நூற் பெயரை மாத்திரம் காட்டுவதைவிட
இப்படிக் காட்டினால் அந்நூல்களின் பெருமையும் அவற்றின் நடையும் நன்றாக
வெளிப்படுமென்பது என் கருத்து. சில இடங்களில் புறநானூற்றுப் பாடல்
முழுவதையுமே அடிக் குறிப்பில் அமைத்தேன். சேர்க்க முடியாத
மேற்கோள்களைப் புஸ்தகத்திற்குப் பின்பு சேர்த்து அச்சிடலாமென்ற
எண்ணத்தோடு தனியே எழுதி வைத்துக் கொண்டேன்.

விடுமுறை முடிந்தவுடன் என்றும் இல்லாத ஊக்கத்தோடு கும்பகோணம்
வந்தேன். புதிய விஷயங்களைக் கண்டு பிடித்ததைப் பற்றி
நண்பர்களிடமெல்லாம் சொல்லி என் சந்தோஷத்தைப் புலப்படுத்திக்
கொண்டேன். அப்போது கும்பகோணம் நேடிவ் ஹைஸ்கூலில் தமிழ்ப்
பண்டிதராக இருந்த குடவாயில் ஐ.சண்முகம்பிள்ளை என்பவர் என்னிடம் சில
நூல்களைப் பாடங் கேட்டு வந்தார்; சிறந்த புத்திமான்; அழுத்தமான
ஞானமுள்ளவர். அவர் இந்த விஷயங்களை எல்லாம் கேட்டு மிகவும்
இன்புற்றார்.

சிந்தாமணியை விரைவில் முடிக்க வேண்டுமென்று இரவும் பகலுமாக
உழைத்து வந்தேன். அதன் இறுதிப் பகுதியாகிய முத்தியிலம்பகத்தில் ஜைன
மத சம்பந்தமான பல செய்திகள் உள்ளன. அவற்றை அப்பொழுதப்பொழுது
வீடூர் அப்பாசாமி நயினாரிடத்தும் கும்பகோணம் சந்திரநாத செட்டியாரிடத்தும்
கேட்டுத் தெரிந்து குறிப்பெடுத்துக் கொண்டேன். சிந்தாமணிப் பதிப்பில்
அடிக்குறிப்பாக எனக்குத் தெரிந்த அந்த விஷயங்களை விளக்கினேன்.

தம்பியின் கலியாணம்

சிந்தாமணி முற்றுப்பெறும் நிலையில் இருந்தது. ஸர்வஜித்து வருஷம்
ஆனி மாதம் என் தம்பியாகிய சிரஞ்சீவி சுந்தரேசையருக்