பக்கம் எண் :

பத்துப்பாட்டின் நல்ல பிரதிகள் 641

யனுப்பினார். இவை மிகவும் திருத்தமான பிரதிகள். இவர்கள் முன்னமே
வந்திருந்தால் கொடுத்திருப்பேன்” என்று சொன்னார். சில தினங்களுக்கு
முன்பு வராமற் போனோமே என்ற வருத்தம் அப்போது எனக்கு உண்டாயிற்று.
ஆனாலும் இந்த மூன்றுமுள்ள வீட்டில் வேறு நல்ல நூல்களும்
இருக்கலாமென்று எண்ணி அந்த வீட்டிலுள்ள மற்ற ஏடுகளைப்
பார்க்கலாமாவென்று கேட்டேன். அப்போது இரவு 8-மணியானமையால் மறு
நாட் காலையில் வந்து பார்க்கலாமென்று திருப்பாற்கடனாதன் கவிராயர்
சொன்னார். அப்படியே மறுநாள் நெல்லையப்பக் கவிராயரும் நானும் அங்கே
போனோம். திருநெல்வேலி ஹிந்து காலேஜில் அப்போது தமிழாசிரியராக
இருந்த அனந்த கிருஷ்ண கவிராயரென்பவரும் எங்களுடன் வந்தார். தம்
வீட்டிலுள்ள புத்தகங்களையெல்லாம் நாங்கள் பார்க்கும்படி திருப்பாற்கடனாதன்
கவிராயர் எடுத்து வைத்தார். ஏறக்குறைய 500 சுவடிகள் இருக்கலாம். முக்கால்
வாசி ஏடுகள் அவருடைய பாட்டனார் எழுதியவை. அவற்றை நாங்கள் மூவரும்
பகுத்துக் கொண்டு தனித்தனியே பார்க்க ஆரம்பித்தோம் பெரிய சுவடி
யொன்றை அனந்த கிருஷ்ண கவிராயர் எடுத்துப் பார்த்தார். நான் ஒன்றை
எடுத்தேன்.

அந்தச் சுவடியின் தலைப்பு என்னவென்று அனந்த கிருஷ்ண
கவிராயரை நான் கேட்டபோது அவர், ‘திருமுருகாற்றுப்படை’ என்றார்.
எனக்குச் சிறிது ஆறுதலுண்டாயிற்று. மறுபடி சில ஏடுகளைத் தள்ளிப் பார்த்து,
‘பொருநராற்றுப்படை’ என்று சொன்னார். இதுவே பத்துப் பாட்டாக
இருக்கலாமென்று பரமேசுவரனுடைய கருணையை நினைந்து நினைந்து
உருகினேன் என் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. கவிராயரையே அந்த
ஏட்டை ஒவ்வொன்றாகப் பார்க்கச் சொன்னேன். பத்துப் பாட்டு முழுவதும்
ஒன்றன்பின் ஒன்றாக உரையுடன் வரிசையாக இருந்தது. மிகவும் பழமையான
ஏடு. எனக்கே அளவற்ற மகிழ்ச்சியும் பிரமையும் உண்டாயின. சுவடியின்
இறுதியில், “ஸ்ரீ வைகுண்டத்திலிருக்கும் கவிராயரிடத்தே தொல்காப்பிய
ஏட்டைக் கொடுத்துக் கொல்ல மாண்டு,,,,, வாங்கி வந்தேன்” என்று
எழுதியிருந்தது. கணக்குப் பார்த்ததில் அது 150 வருஷங்களுக்கு
முற்பட்டதென்றும் ஏடு எழுதிய காலம் அதற்கும் 200 வருஷங்களுக்கு முன்பு
இருக்கலாமென்றும் தோன்றின. அப்பால் நிதானித்துக் கொண்டு மற்ற
ஏடுகளைப் பார்த்ததில் சிந்தாமணியும், கொங்குவேண்மாக் கதையும், சில
பிரபந்தங்களும் இருந்தன. கொங்குவேண்மாக்கதை முன்னே கூறிய பிரதியைப்
பார்த்து எழுதியது. அதில் முதலுமில்லை; இறுதியுமில்லை. அப்
-----------------------------------------------------------------------------
பெயரும் வருஷமும் ஞாபகமில்லை.