பக்கம் எண் :

ராய்சந்திர பாய்105

Untitled Document
ஆத்மானுபூதியை   அடையவேண்டும் என்பதில் அவருக்கு  இருந்த
தீவிர ஆர்வமுமே      என்னை மயக்கியவை.   ஆத்மானுபூதியை
அடையவேண்டும் என்ற ஒன்றிற்காகவே அவர்    வாழ்ந்து வந்தார்
என்பதையும் பிறகு கண்டேன். முக்தானந்தரின் பாடல் ஒன்றை அவர்
சதர உச்சரித்துக்கொண்டே இருப்பார்.      அது அவர் உள்ளத்தில்
பதிக்கப்பட்டிருந்தது என்றே சொல்லவேண்டும். அப்பாடலாவது:

நித்தம் யான்செய் வினையதனில்
நிமலன் தோற்றம் காண்பேனேல்,
அத்தன் அருளுக் குரியோனாய்
ஆனேன் என்று அகமகிழ்வேன்;
வித்தும் முதலும் ஆதியுமாய்
விளங்கும் நாதன் என்கடவுள்;
முக்தா னந்தன் வாழ்விற்கு
மூலா தாரம் அவனேகாண்.

     ராய்ச்சந்திர பாயின் வியாபாரம் பல லட்சக்கணக்கில் மூலதனம்
கொண்டது. முத்து, வைரங்களைச் சோதித்துப்     பார்ப்பதில் அவர்
கைதேர்ந்தவர். எவ்வளவுதான் சிக்கலான பிரச்சனையாக இருந்தாலும்,
அது அவருக்குக் கஷ்டமானதே அல்ல.    ஆனால்,    அவருடைய
வாழ்க்கையில் இவைகளெல்லாம் முக்கியமானவை அன்று.   அவரது
வாழ்க்கையில் மிகக் கேந்திரமாக இருந்தது,      கடவுளை நேருக்கு
நேராகக் காணவேண்டும் என்ற ஆர்வம் தான். அவருடைய வியாபார
மேஜை மீதிருக்கும் பல நூல்களுள், சில மத நூல்களும், அவருடைய
தினக்குறிப்பும் இருக்கும்.         வர்த்தக வேலை முடிந்ததுமே மத
நூல்களையோ,        தினக்குறிப்பையோ பிரித்து விடுவார்.  அவர்
எழுதிப்        பிரசுரமாகியிருக்கும்     பல நூல்கள் இந்தத் தினக்
குறிப்பிலிருந்து          எடுக்கப்பட்டவையே.    பலமான வர்த்தக
பேரங்களையெல்லாம் பேசி முடித்தவுடனேயே, ஆன்மாவில் பொதிந்து
கிடக்கும் ரகசியங்களை எழுத ஆரம்பித்துவிடுகிறார் என்றால்,  அவர்
உண்மையில் சத்தியத்தை நாடுபவராக இருக்க வேண்டுமே அல்லாமல்
வியாபாரியாக இருக்க முடியாது என்பது தெளிவானது.   ஒரு தடவை
இரண்டு தடவையன்று; அநேகமாக          எப்பொழுதுமே அவர்,
வியாபாரத்தின் நடுவில்        இருந்துகொண்டே கடவுளைத் தேடும்
முயற்சியில் இவ்விதம்        ஆழ்ந்திருந்ததைக் கண்டேன்.  சாந்தி
நிலையிலிருந்து அவர் மனம்   மாறுபட்டதாகவே நான் கண்டதில்லை.
எந்த       ஒரு வியாபாரமும்,    சுயநலமும் என்னை   அவருடன்
பிணைக்கவில்லை என்றாலும்,       அவருடன் நெருங்கிய தொடர்பு
கொண்டு இன்புற்றேன். அப்பொழுது நான் வழக்கே இல்லாத வெறும்
பாரிஸ்டர். என்றாலும்,    என்னைப் பார்க்கும் போதெல்லாம்,  சமய
சம்பந்தமான முக்கியமான விஷயங்களைக் குறித்து என்னிடம் அவர்
பேசுவார்.அச்சமயம் நான் எதிலும் தெளிவில்லாது,