பக்கம் எண் :

முதல் வழக்கு113

Untitled Document
குழந்தை விளையாட்டுப் போன்றதாகும்.

     என் கட்சிக்காரர் வெற்றி பெற்றாரா,   தோற்றாரா என்பது கூட
எனக்குத் தெரியாது. கோர்ட்டைவிட்டு    அவசரமாகக் கிளம்பினேன்.
ஆனால், என்னைக் குறித்து எனக்கே வெட்கமாக இருந்தது. வழக்கை
நடத்தும் தைரியம் எனக்கு    ஏற்படும்வரையில்,  எந்த வழக்கையும்
எடுத்துக்கொள்ளுவதில்லை என்று முடிவு கட்டிக் கொண்டேன்.  நான்
தென்னாப்பிரிக்காவுக்குச்           செல்லும் வரையில்,  திரும்பவும்
கோர்ட்டுக்குப்         போகவே இல்லை.   நான் செய்து கொண்ட
தீர்மானத்தில்,     பாராட்டக் கூடியது எதுவும் இல்லை. அவசியத்தை
முன்னிட்டு,   வேறு வழி இல்லாமலேயே நான்     அந்த முடிவுக்கு
வந்தேன். தோற்றுப் போவதற்கு என்று வழக்கை என்னிடம் கொண்டு
வந்து       ஒப்படைக்க யாரும்    அவ்வளவு முட்டாளாக இருக்க
மாட்டார்கள்!

     ஆயினும், பம்பாயில் இன்னும்        ஒரு வழக்கு என்னிடம்
வரக்காத்திருந்தது. ஒரு விண்ணப்பத்தைத்       தயாரிக்க வேண்டி
இருந்ததே அது. ஓர் ஏழை முஸ்லீமின்   நிலத்ைதைப் போர்பந்தரில்
பறிமுதல் செய்து விட்டார்கள்.    பெரிய மனிதரான என் தந்தைக்கு
ஏற்ற மகனாக நான் இருப்பேன் என்று எண்ணி,   அவர் என்னிடம்
வந்தார்.   அவருடைய கட்சியில் பலம் இல்லை என்றே தோன்றிற்று.
என்றாலும்,      விண்ணப்பத்தை அச்சிடும் செலவை அவர் ஏற்றுக்
கொள்ள வேண்டும் என்று கூறி, விண்ணப்பம்     தயாரிக்க ஒப்புக்
கொண்டேன்.  அதைத் தயாரித்து,       நண்பர்களுக்குப் படித்துக்
காட்டினேன். அவர்களும் அதை அங்கீகரித்தார்கள்.   விண்ணப்பம்
தயாரிப்பதிலாவது எனக்குத் தகுதியிருக்கிறது என்ற அளவுக்கு அது
எனக்கு நம்பிக்கை ஏற்படும்படி செய்தது.   உண்மையிலேயே அந்த
ஆற்றல் எனக்கு இருந்தது.

     கட்டணம்   எதுவுமே     வாங்கிக்    கொள்ளாமல்   நான்
விண்ணப்பங்கள் தயாரித்துக் கொடுப்பதாக இருந்தால்  என் தொழில்
நன்றாக நடக்கும். ஆனால்,       சாப்பாட்டுக்கு வழி வேண்டுமே?
உபாத்தியாயர் தொழிலுக்குப் போய்விடலாமா என்று  எண்ணினேன்.
எனக்கு ஆங்கில ஞானமும் நன்றாக இருந்தது.       ஏதாவது ஒரு
பள்ளிக்கூடத்தில்        மெட்ரிகுலேஷன் மாணவருக்கு ஆங்கிலம்
போதிக்கும் வேலை,      எனக்குப் பிரியமாக இருந்திருக்கும். இந்த
வகையில்            என் செலவில் ஒரு    பகுதியையாவது நான்
சமாளித்தவனாவேன்.    பத்திரிக்கைகளில் ஒரு     விளம்பரத்தைப்
பார்த்தேன்:    ‘தினம் ஒரு மணி நேரம் போதிப்பதற்கு ஓர் ஆங்கில
ஆசிரியர் தேவை. சம்பளம் ரூ.75’ என்று      அந்த விளம்பரத்தில்
இருந்தது.     ஒரு பிரபலமான உயர்நிலைப் பள்ளியின் விளம்பரமே
அது. அந்த உத்தியோகத்திற்கு மனுப் போட்டேன். நேரில் சந்தித்துப்
பேச அழைப்பும் வந்தது. அதிக உற்சாகத்தோடு அங்கே போனேன்.