பக்கம் எண் :

வழக்குக்கான தயாரிப்பு 159

Untitled Document
ஒப்படைக்கப்பட்டது.   அவற்றில்    அட்டர்னி    எந்த அளவுக்கு
எடுத்துக்கொள்ளுகிறார், நான் தயாரித்துக் கொடுப்பதில் எதை அவர்
நிராகரித்து   விடுகிறார்     என்பதைக்   கவனித்து வருவதே ஒரு
போதனையாயிற்று.     அதோடு  அட்டர்னி தயாரித்துக் கொடுக்கும்
விவரங்களில் எவ்வளவை   வக்கீல் உபயோகித்துக்  கொள்ளுகிறார்
என்பதையும் நான் அறிய முடிந்தது.   சட்ட நுணுக்கங்களை அறிந்து
கொள்ளுவதற்கும்,   சாட்சியங்களை        ஒழுங்குபடுத்துவதற்கும்
எனக்குள்ள திறமையை அளந்து      அறிவதற்குச் சாத்தியமானதாக
இந்த வழக்குத் தயாரிப்பு வேலை உதவுவதையும் கண்டேன்.

     இந்த      வழக்கில்  மிக அதிகமான    சிரத்தை  எடுத்துக்
கொண்டேன். அதில் நான் முற்றும் மூழ்கியிருந்தேன் என்றே சொல்ல
வேண்டும். பற்று வரவு சம்பந்தமான  எல்லாத் தஸ்தாவேஜு களையும்
படித்தேன். என் கட்சிக்காரர்   அதிகத் திறமைசாலி. என்னிடம் முழு
நம்பிக்கையும் கொண்டிருந்தார். இதனால்  என் வேலை எளிதாயிற்று.
கணக்கு    வைக்கும் முறையைக் குறித்தும்   ஓரளவுக்குப் படித்துத்
தெரிந்து   கொண்டிருந்தேன்.    கடிதப் போக்குவரத்துக்களெல்லாம்
பெரும்பாலும்   குஜராத்தியிலேயே    இருந்ததால்   அவற்றை நான்
ஆங்கிலத்தில்    மொழிபெயர்க்க      வேண்டியதாயிற்று. இதனால்
மொழிபெயர்க்கும் ஆற்றலும் எனக்கு அதிகமாயிற்று.

     நான் முன்னால்    கூறியிருப்பதைப்போல்,  சமய சம்பந்தமான
விஷயங்களிலும்,  பொது வேலைகளிலும்      நான் அதிக சிரத்தை
கொண்டிருந்தபோதிலும், என்   நேரத்தில் கொஞ்சத்தை அவற்றிற்குச்
செலவிட்டு    வந்தாலும்,   அப்பொழுது    எனக்கு        அதிக
முக்கியமானவையாக     இருந்தவை அவை அல்ல. எனக்கு இருந்த
முக்கியமான சிரத்தையெல்லாம் வழக்குச் சம்பந்தமான வேலைகளைக்
கவனிப்பதே, சட்டத்தைப் படிப்பது, அவசியமாகும்  போது அச்சட்ட
சம்பந்தமான வழக்குகளைத்       தேடியெடுப்பது ஆகியவைகளில்
ஈடுபட்டு,   மிஞ்சிய நேரங்களில்தான்         மற்ற வேலைகளைக்
கவனிப்பேன்.          இதன் பலனாக, வழக்கின் இரு தரப்பினரின்
தஸ்தாவேஜு களெல்லாம் என்னிடம் இருந்ததால் கட்சிக்காரர்களையும்
விட நன்றாக வழக்கைப்பற்றிய விவரங்கள் எனக்குத் தெரிந்திருந்தன.

     காலஞ்சென்ற ஸ்ரீபின்கட்,  ‘விவரங்களே சட்டத்தில்  முக்கால்
பாகம்’ என்று      புத்திமதி          கூறியிருந்தார்.  அதை நான்
நினைவுபடுத்திக்கொண்டேன்.  தென்னாப்பிரிக்காவின்        பிரபல
பாரிஸ்டரான காலஞ்சென்ற   ஸ்ரீ லியோனார்டும் இந்த உண்மையைப்
பின்னால் உறுதிப்படுத்தினார். என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த ஒரு
வழக்கில் என் கட்சிக்காரர்     பக்கம் நியாயம் இருந்தாலும், சட்டம்
அவருக்கு விரோதமாக      இருப்பதாகத் தோன்றியதைக் கண்டேன்.
என்ன செய்வதென்று தெரியாமல்      ஸ்ரீ லியோனார்டின் உதவியை