பக்கம் எண் :

வழக்குக்கான தயாரிப்பு 161

Untitled Document
தீர்ந்துவிடும்     என்றும்    யோசனை கூறினேன்.  கட்சிக்காரர்கள்
இருவரும் பெரிய வியாபாரிகள். என்றாலும், அவர்களுடைய வசதிகள்
எல்லாவற்றையுமே விழுங்கிவிடும் அளவுக்கு,   வக்கீல் கட்டணங்கள்
பெருகிக்கொண்டே போயின. அவர்கள் இருவரின் கவனம் முழுவதும்
இந்த       வழக்கிலேயே   ஈடுபட்டிருந்ததால் மற்ற வேலைகளைக்
கவனிப்பதற்கு        அவர்களுக்கு நேரமே இல்லை. இதற்கிடையே
ஒருவருக்கொருவர்      விரோதமும் வளர்ந்து   கொண்டுபோயிற்று.
இத்தெழிலில் எனக்கு      வெறுப்பும் ஏற்பட்டு விட்டது. இரு தரப்பு
வக்கீல்களும் அவர்கள்    வக்கீல்கள் என்ற முறையில் அவரவர்கள்
தரப்புக்குச் சாதகமான      சட்ட நுட்பங்களைக் கிளப்பிக்கொண்டே
இருக்க வேண்டியது, அவர்களுடைய கடமையாயிற்று. வெற்றி பெறும்
கட்சிக்காரர்,   தாம்     செலவளித்த தொகை        முழுவதையும்
செலவுத்தொகையாக     எதிர்த் தரப்பிலிருந்து பெற்று விடுவதில்லை
என்பதையும் முதன் முதலாக     அப்பொழுது தான் நான் கண்டேன்.
கோர்ட்டுக்        கட்டணச் சட்டத்தின்படி வாதி, பிரதிவாதிகளுக்கு
இவ்வளவுதான் செலவுத்தொகையாக அனுமதிக்கலாம் என்று  விதிகள்
நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அட்டர்னிக்குக்  கட்சிக்காரர்
உண்மையில் கொடுக்கும் தொகையோ, அந்த விதிகளில்  கண்டதற்கு
மிக       அதிகமாக இருந்தது.  இதையெல்லாம்  என்னால்  சகிக்க
முடியவில்லை. இரு தரப்பினரிடமும்   நட்புக்கொண்டு,  இருவரையும்
சமரசம் செய்து வைத்துவிடுவதுதான்       எனது கடமை என்பதை
உணர்ந்தேன்.   சமரசம் செய்து          வைத்துவிட என்னாலான
முயற்சிகளையெல்லாம் செய்தேன். கடைசியாக         தயாப் சேத்
சம்மதித்தார்.   ஒரு     மத்தியஸ்தரும்    நியமிக்கப்பட்டார். அவர்
முன்னிலையில் வழக்கு விவாதிக்கப்பட்டு, தாதா   அப்துல்லா வெற்றி
பெற்றார்.

     ஆனால்,   அதோடு   நான் திருப்தி   அடைந்து விடவில்லை.
தீர்ப்பான        தொகையை   என் கட்சிக்காரர் உடனே வசூலிக்க
நடவடிக்கை எடுப்பதென்றால், தீர்ப்புத் தொகை முழுவதையும் உடனே
கட்டி விடுவதென்பது தயாப் சேத்தினால்   முடியாத காரியம். மேலும்,
தென்னாப்பிரிக்காவில்      வசித்து வந்த போர்பந்தர் மேமன்களிடம்
உறுதியான      கொள்கை ஒன்று இருந்தது. பட்ட கடனைச் செலுத்த
முடியாமல்,    ‘இன்ஸால்வென்ட்’டாகி விடுவதை விடச் செத்துவிடுவது
மேல் என்பது   அவர்கள் கொள்கை. மொத்தத்  தொகையான 37,000
பவுனையும், செலவுத் தொகையும் உடனே   செலுத்திவிடுவது என்பது
தயாப் சேத்தினால் முடியாது.      ஒரு தம்படியும் குறையாமல் முழுத்
தொகையையும்      செலுத்திவிடவே          அவர் விரும்பினார்.
‘இன்ஸால்வென்ட்’டாகி விடவும் அவர் விரும்பவில்லை.  இதற்கு ஒரே
வழிதான் உண்டு.  நியாயமான தவணைகளில் அத்தொகையைப் பெறத்
தாதா அப்துல்லா