பக்கம் எண் :

சமய எண்ணத்தின் எழுச்சி163

Untitled Document
நம்பிக்கை வைத்திருந்தார். மனப்பூர்வமான பிரார்த்தனைக்குக் கடவுள்
செவி சாய்க்காமல் இருந்து விடமாட்டார் என்றும்     அவர் திடமாக
நம்பினார்.    இதற்குப் பிரிஸ்டலின் ஜார்ஜ் முல்லர் போன்றவர்களின்
உதாரணத்தையும் அவர் எடுத்துக் கூறுவார். அவர், தமது அன்றாடத்
தேவைகளுக்குக் கூடக் கடவுளைப் பிரார்த்தித்துவிட்டு,   அவரையே
நம்பி இருந்துவிடுவாராம். பிரார்த்தனையின் சக்தியைக் குறித்து அவர்
கூறுவதை யெல்லாம் எவ்விதத் துவேசமும்    இல்லாத கவனத்துடன்
கேட்டுக்       கொண்டிருந்தேன்.     ‘என் மனச் சாட்சி மாத்திரம்
ஆக்ஞாபித்து விடுமாயின்       நான் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவி
விடுவேன் இவ்விதம் நான் செய்வதை எதுவும் தடுத்து விட முடியாது’
என்று அவரிடம் உறுதி கூறினேன்.    அந்தராத்மா காட்டும் வழியில்
நடக்க, நான் நீண்ட காலமாகவே கற்றுக்கொண்டிருந்ததால், எந்தவிதத்
தயக்கமும் இன்றி அவருக்கு இந்த வாக்குறுதியை நான் அளித்தேன்.
அந்தராத் மாவுக்குப் பணிந்து நடப்பதில்    ஆனந்தம் கொண்டேன்.
அதற்கு விரோதமாக நடப்பதென்றால்,    முடியாது என்பதோடு, அது
எனக்கு வேதனையாகவும் இருக்கும்.

     எனவே, நாங்கள்   வெல்லிங்டனுக்குச் சென்றோம். என்னைப்
போன்ற, ‘கறுப்பு மனிதனை’ அழைத்துப் போய் அங்கே சமாளிப்பது
ஸ்ரீ பேக்கருக்குக் கஷ்டமாகிவிட்டது. முற்றும்    என்னாலேயே பல
சமயங்களிலும்      அசௌகரியங்களை       அவர் அனுபவிக்க
வேண்டியதாயிற்று. பிரயாணத்தின்       நடுவில் ஞாயிற்றுக்கிழமை
குறுக்கிட்டது. ஸ்ரீ பேக்கரும்     அவருடைய சகாக்களும் புண்ணிய
நாளான ஞாயிற்றுக்கிழமைகளில்      பிரயாணம் செய்யமாட்டார்கள்.
ஆகவே இடையில் ஒரு நாள் பிரயாணத்தை நிறுத்தவேண்டி வந்தது.
ஸ்டேஷன் ஹோட்டல் மானேஜர், எவ்வளவோ விவாதத்திற்குப் பிறகு
என்னை ஹோட்டலில்    வைத்துக் கொள்ளச் சம்மதித்த போதிலும்
சாப்பாட்டு அறையில் என்னை அனுமதிக்க மாத்திரம் மறுத்துவிட்டார்.
எளிதில் விட்டுக் கொடுக்கிறவர் அல்ல,   ஸ்ரீ பேக்கர். ஹோட்டலில்
வந்து   தங்குகிறவர்களின் உரிமையைக் குறித்து அவர் எவ்வளவோ
வாதாடினார். என்றாலும், அவருக்கு இருந்த கஷ்டத்தை நான் அறிய
முடிந்தது. வெல்லிங்டனிலும் நான் ஸ்ரீ  பேக்கருடனேயே தங்கினேன்.
என்னால் அவருக்கு ஏற்பட்ட   அசௌகரியங்களை மறைக்க அவர்
என்னதான் முயன்ற போதிலும் அவற்றை நான் அறியாமல்  இல்லை.

     இந்த மகாசபை, பக்தியுள்ள    கிறிஸ்தவர்களைக் கொண்டது.
அவர்களுக்கு    இருந்த   நம்பிக்கையைக்          கண்டு நான்
மகிழ்ச்சியடைந்தேன்.      பூஜ்யர் மர்ரேயையும் சந்தித்தேன். பலர்
எனக்காகப் பிரார்த்தனை செய்ததையும் கண்டேன். அவர்களுடைய