பக்கம் எண் :

நேட்டால் இந்தியர் காங்கிரஸ்183

Untitled Document
1894-ஆம் வருடக் கணக்குப்   புத்தகங்களை  இன்றுகூட நேட்டால்
இந்தியர்      காங்கிரஸ் தஸ்தாவேஜூகளில் காணலாம் என்று நான்
தைரியமாகக் கூற முடியும். கணக்குகளைச்     சரியாக வைத்திருக்க
வேண்டியது எந்த      ஸ்தாபனத்திற்குமே அத்தியாவசியமானதாகும்.
இல்லை யானால் அந்த ஸ்தாபனத்திற்குக் கெட்ட பெயர்    ஏற்பட்டு
விடும். சரியானபடி     கணக்கு வைத்திருக்காவிட்டால், உண்மையை
அதனுடைய அசல்  தூய்மையுடன் வைத்து இருப்பதென்பது இயலாத
காரியம்.

     காங்கிரஸின் மற்றோர் அம்சம்,     தென்னாப்பிரிக்காவிலேயே
பிறந்தவர்களான, படித்த      இந்திய இளைஞர்களின் சேவையாகும்.
அங்கே பிறந்த இந்தியரின்        கல்வி சங்கம் ஒன்று காங்கிரஸின்
ஆதரவில்      அமைக்கப் பெற்றது.  இந்தப் படித்த இளைஞர்களே
பெரும்பாலும்    அச் சங்கத்தின்      அங்கத்தினர்கள். பெயருக்கு
அவர்கள்       ஒரு தொகையைச்  சந்தாவாகச் செலுத்தவேண்டும்.
அவர்களுடைய    தேவைகளையும்   குறைகளையும்     எடுத்துக்
கூறுவதற்கும்,    அவர்களிடையே    புதிய        எண்ணங்களை
எழுப்புவதற்கும்,   இந்திய     வர்த்தகர்களுடன்   அவர்களுக்குத்
தொடர்பை உண்டாக்கிச் சமூகத்திற்குச் சேவை செய்யும்  வாய்ப்பை
அவர்களுக்கு அளிப்பதற்கும்    இச்சங்கம் பயன்பட்டது. அது ஒரு
வகையான     விவாதசபை போன்றது.  அங்கத்தினர்கள் அடிக்கடி
கூடுவார்கள். பல விஷயங்களைக் குறித்துப் பேசுவார்கள்; எழுதியும்
படிப்பார்கள்.     இச்சங்க சம்பந்தமாக  ஒரு சிறு புத்தகசாலையும்
ஆரம்பமாயிற்று.      காங்கிரஸின்   மூன்றாவது அம்சம், பிரசாரம்.
நேட்டாலில்   இருந்துவரும்    இந்தியர் சம்பந்தமான உண்மையான
நிலையை   தென்னாப்பிரிக்காவில்   இருக்கும்    ஆங்கிலேயரும்,
இங்கிலாந்தில்   இருப்பவரும்,   இந்திய     மக்களும் அறியும்படி
செய்வதே     இக்காரியம்.  அந்த நோக்கத்தின் பேரில் நான் இரு
துண்டுப்     பிரசுரங்களை       எழுதினேன்.  அவற்றுள் ஒன்று,
‘தென்னாப்பிரிக்காவில் இருக்கும்    ஒவ்வொரு பிரிட்டானியருக்கும்
வேண்டுகோள்’ என்பது. அது, நேட்டால்   இந்தியரின் பொதுவான
நிலைமையை     ஆதாரங்களுடன் கூறுவதாகும். மற்றொரு பிரசுரம்,
‘இந்தியரின்   வாக்குரிமை-ஒரு கோரிக்கை’  என்ற தலைப்புடையது.
நேட்டால்   இந்தியரின் வாக்குரிமையைப்பற்றிய சரித்திரம், உண்மை
விவரங்களுடனும்,     புள்ளி விவரங்களுடனும் அதில் சுருக்கமாகக்
கூறப்பட்டது, இந்தத் துண்டுப் பிரசுரங்களைத்   தயாரிப்பதற்கு நான்
அதிகம்     படிக்க   வேண்டியிருந்ததோடு   அதிக      சிரமம்
எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், இதில்  உழைப்பிற்கு
ஏற்ற பலன் கிடைத்தது. அவைகளை எல்லா       இடங்களுக்கும்
அனுப்பினோம்.

     இத்தகைய நடவடிக்கைகளின் பயனாகத் தென்னாப்பிரிக்காவில்