பக்கம் எண் :

188சத்திய சோதனை

Untitled Document
உழைப்பைக் கொண்டே தங்களுடைய விவசாயத்  தொழிலை விருத்தி
செய்து கொண்டு விடலாம் என்று அப்பொழுது   வெள்ளைக்காரர்கள்
எண்ணினார்கள்.

     இந்தியரோ,     அவர்களிடமிருந்து    எதிர்பார்க்கப்பட்டதற்கு
அதிகமாகவே   தென்னாப்பிரிக்காவுக்குப் பயன்பட்டனர். ஏராளமாகக்
காய்கறிகளைப்       பயிரிட்டார்கள்.   இந்தியாவிலிருந்து பல ரகக்
கறிகாய்களையும்  கொண்டுவந்து அங்கே பயிரிட்டனர்.  அந்நாட்டுக்
காய்கறித்    தினுசுகளைக்  குறைந்த செலவில்     பயிரிடுவதையும்
சாத்தியமாக்கினர்.    மாமரத்தையும்      அங்கே   முதன் முதலில்
பயிரிட்டனர். அவர்களுடைய உழைப்பும் முயற்சியும் விவசாயத்தோடு
நின்று  விடவில்லை. வர்த்தகத்திலும் புகுந்தது. நிலம் வாங்கி, வீடுகள்
கட்டினர்.        பலர் தொழிலாளர்  அந்தஸ்திலிருந்து, நிலத்திற்கும்
வீடுகளுக்கும் தாங்கள்  சொந்தக்காரர் என்ற நிலைக்கும் உயர்ந்தனர்.
இவர்களைத்         தொடர்ந்து  இந்தியாவிலிருந்து வர்த்தகர்களும்
அங்கேபோய்       வியாபாரம்      செய்யக் குடியேறினர். இப்படி
வந்தவர்களில்       முதன் முதலாக வந்தவர்   காலஞ்சென்ற சேத்
அபூபக்கர் ஆமத்.   வெகு    சீக்கிரத்திலேயே       அவர் தமது
வர்த்தகத்தைப் பெருக்கி விட்டார்.

     வெள்ளை வர்த்தகர்கள் திகிலடைந்து விட்டனர். ஆரம்பத்தில்
இந்தியத்      தொழிலாளர்   வேண்டுமென்று     விரும்பியபோது,
அவர்களுக்கு வர்த்தகத் திறமையும்      இருக்கும் என்று அவர்கள்
எண்ணவில்லை.   சுயேச்சையான விவசாயிகள்    என்ற அளவோடு
மாத்திரம்    இந்தியர்கள்      இருந்திருந்தாலும்         சகித்துக்
கொண்டிருப்பார்கள்.       ஆனால்,     வர்த்தகத்திலும் அவர்கள்
தங்களுக்குப்   போட்டியாக இருப்பதை     நினைத்துப் பார்க்கவும்
வெள்ளை வர்த்தகருக்குச் சகிக்கவில்லை.

     இந்தியர் மீது விரோதத்திற்கு விதை விதைத்தது இதுதான். இது
வளர்வதற்கு மற்றும் பல விஷயங்களும் உதவியாக இருந்து விட்டன.
நமது     மாறுபட்ட வாழ்க்கை முறைகள்,   நமது எளிய வாழ்க்கை,
கொஞ்ச   லாபத்தைக்     கொண்டு    திருப்தியடைந்துவிடும்  நம்
மனப்பான்மை, சுத்தம்,   சுகாதாரம் ஆகியவை சம்பந்தமாக நம்மிடம்
இருக்கும்    அசிரத்தை,  நம்மைச் சுற்றி இருப்பவைகளைச் சுத்தமாக
வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் நமக்குச் சுறுசுறுப்பு இல்லாமை,
வீடுகளைப்   பழுதில்லாமல்   வைத்திருப்பதில்       நமக்கிருக்கும்
கஞ்சத்தனம், இவைகள் எல்லாவற்றுடன்  மத வித்தியாசமும் சேர்ந்து
விரோதத் தீயை ஊதி வளர்த்தன. இந்த விரோதம்,      இந்தியரின்
வாக்குரிமையை ரத்துச் செய்யும் மசோதாவின் மூலமும்,     ஒப்பந்த
இந்தியருக்கு வரி விதிக்கும்    மசோதாவின் மூலமும், சட்ட ரீதியில்
வெளிப்பட்டது.   சட்டம் இல்லாமலேயே     அநேக தொந்தரவுகள்
ஏற்கனவே ஆரம்பம்