பக்கம் எண் :

குடித்தனக்காரனாக197

Untitled Document
கூடாது என்று கூறி,       அவளை வெளியே போகச் சொன்னேன்.

     என் சகாவிடம், “இந்தக் கணத்திலிருந்து உமக்கும்   எனக்கும்
எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. நெடுக,        நான் ஏமாற்றப்பட்டு
வந்திருக்கிறேன். எனக்கு     நானே பைத்தியக்காரப் பட்டம் கட்டிக்
கொண்டேன். உம்மிடம்    நான் வைத்த நம்பிக்கைக்கு நீர் செய்யும்
பிரதியுபகாரம் இதுதானா?” என்றேன்.

     அப்பொழுதும்   நல்லறிவு பெறாத அவர்,   என் சங்கதிகளை
அம்பலப்படுத்திவிடுவதாக என்னை மிரட்டினார் :  “மறைத்து வைக்க
என்னிடம் எதுவுமே இல்லை. நான்     செய்தது ஏதாவது இருந்தால்
அம்பலப்படுத்தும். ஆனால்,      இந்தக் கணமே நீர் இந்த இடத்தை
விட்டுப் போயாக வேண்டும்” என்றேன்.    இதைக் கேட்டதும் அவர்
இன்னும் அதிகமாகக் கோபாவேசம் கொண்டார்.  வேறு வழி இல்லாது
போகவே, கீழே இருந்த குமாஸ்தாவைக் கூப்பிட்டேன்.     “உடனே,
போலீஸ் சூப்பரின்டென்டிடம் போய், என் வந்தனங்களை அவருக்குத்
தெரிவித்து விட்டு,   என்னிடம் வசித்து வந்த ஒருவர், ஒழுங்கீனமாக
நடந்து               கொண்டார் என்றும்,  என் வீட்டில் அவரை
வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை என்றும்,   அவர் வெளியே
போக மறுக்கிறார் என்றும், போலீஸ் உதவியை   அனுப்பினால் மிக்க
நன்றியறிதல்      உள்ளவனாவேன்   என்றும் அவரிடம் சொல்லும்”
என்றேன்.

     நான்    கண்டிப்பாகத்தான்      இருக்கிறேன் என்பதை இது
அவருக்குக்   காட்டியது.   அவர் குற்றமே    அவரைப் பலவீனப்
படுத்தியும் விட்டது; என்னிடம் மன்னிப்புக்    கேட்டுக் கொண்டார்.
போலீஸு க்குத் தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார்.
வீட்டை விட்டு உடனே போய் விடவும் ஒப்புக் கொண்டார். போயும்
விட்டார்.

     இச் சம்பவம்   என் வாழ்க்கையில்        தக்க  சமயத்தில்
செய்ததோர்   எச்சரிக்கையாக அமைந்தது. கெட்டிக்காரத்தனமுள்ள
இந்தத் தீய ஆசாமி, நெடுக என்னை     எவ்வளவு தூரம் ஏமாற்றி
வந்திருக்கிறார் என்பதே இப்பொழுதுதான்    என்னால் தெளிவாகக்
காண முடிந்தது. அவர் என்னிடம் இருக்க இடம் கொடுத்தது,  நான்
ஒரு     நல்ல காரியத்திற்குக் கெட்ட முறையை அனுசரித்ததாயிற்று.
நெருஞ்சிச் செடியிலிருந்து   அத்திப் பழம் எடுக்கலாம் என்று நான்
எதிர் பார்த்து விட்டேன்.அந்தத் தோழர் கெட்ட நடத்தை உள்ளவர்
என்பதை நான்    அறிந்தே இருந்தேன்.     என்றாலும், என்னிடம்
உண்மையாக நடந்து கொள்ளுவாரென்று நம்பிவிட்டேன்.   அவரைச்
சீர்திருத்துவதற்கு நான்            செய்த முயற்சியில் என்னையே
நாசப்படுத்திக் கொள்ளும்     அளவுக்கு நெருங்கி வந்து விட்டேன்.
அன்புள்ள நண்பர்களின்     எச்சரிக்கைகளையெல்லாம் உதாசீனம்
செய்து விட்டேன். அவரிடம் நான் கொண்டிருந்த பிரியம்