பக்கம் எண் :

ஒரு துக்கமான சம்பவம் 23

Untitled Document
கூடாது?

     மேலும்,    அப்பொழுது நான் ஒரு கோழையாகவும் இருந்தேன்.
திருடர்கள்      பயமும், பிசாசுகள், பாம்புகள் ஆகியவற்றின் பயமும்
எனக்கு இருந்தன.இரவில்          வீட்டை விட்டு வெளியே வரவே
மாட்டேன். இருட்டு என்றாலே எனக்குப் பயங்கரமாக   இருக்கும்.ஒரு
பக்கத்திலிருந்து பிசாசுகளும், மற்றொரு பக்கத்திலிருந்து  திருடர்களும்,
வேறொரு பக்கத்திலிருந்து பாம்புகளும்     வருவது போலக் கற்பனை
செய்து கொண்டிருக்கும்    காரணத்தால், இருட்டில் தூங்குவதென்பது
என்னால் முடியாத   காரியம். எனவே, அறையில் விளக்கு இல்லாமல்
என்னால் தூங்க முடியாது. என் மனைவி அப்பொழுது குழந்தையல்ல;
வாலிபப் பருவத்தையடையும் தறுவாயில்       இருந்தாள்.அவள் என்
பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பாள்.எனக்கு       இருந்த
பயங்களையெல்லாம் அவளிடம் எப்படிச் சொல்லுவது? என்னை விட
அவள் தைரியசாலி   என்பதை நான் அறிவேன். இதனால் என்னைக்
குறித்து நானே         வெட்கப்படுவேன். பாம்பு, பிசாசு என்ற பயம்
அவளுக்கு இல்லை. இருட்டில் எங்கே வேண்டுமானாலும்   போவாள்.
என்னிடமிருந்த இந்தப்        பலவீனங்களை எல்லாம் என் நண்பர்
அறிவார். உயிரோடு பாம்பைத் தம்  கையில் பிடிக்க முடியும் என்றும்,
திருடர்களை  எதிர்த்து விரட்டத் தம்மால் முடியும் என்றும், பிசாசுகள்
உண்டு என்றே       தாம் நம்புவதில்லை என்றும் அவர் என்னிடம்
கூறுவார். இவ்வளவும் புலால் உண்பதன் பலன்கள் என்பார்.

     குஜராத்திக் கவியான      நர்மத்தின் சிந்துப் பாடல் ஒன்றைப்
பள்ளிச் சிறுவர்கள் பாடுவார்கள்.அது பின் வருமாறு:

பிரம்மாண்டமான ஆங்கிலேயனைப் பார்.
சின்னஞ் சிறிய இந்தியனை அவன் ஆளுகிறான்.
காரணம்: புலால் உண்பதால்
அவன் ஐந்து முழ உயரம் இருப்பதே.

     இவையெல்லாம் தமக்குரிய             விளைவை என்னிடம்
உண்டுபண்ணி விட்டன. நான் தோற்றுப் போனேன்.    புலால் உணவு
நல்லது; அது என்னைப் பலமுள்ளவனாகவும்     தைரியசாலியாகவும்
மாற்றும் ; நாடு முழுவதுமே     புலால் உணவு கொள்ள ஆரம்பித்து
விட்டால் ஆங்கிலேயரை வென்று      விடலாம் என்ற எண்ணங்கள்
என்னுள் வளர்ந்தன.

     அதன்பேரில், பரிசோதனையைத் தொடங்குவதற்கு ஒரு  நாளும்
குறிக்கப்பட்டது. அது ரகசியமாக     நடைபெற வேண்டும்.   காந்தி
சமூகத்தினர் வைஷ்ணவர்கள்.  முக்கியமாக என் பெற்றோர்கள் தீவிர
வைஷ்ணவர்கள். நாள் தவறாமல்   அவர்கள் விஷ்ணு கோயிலுக்குப்
போவார்கள். குடும்பத்திற்கு என்றே சொந்தமான      கோயில்களும்
உண்டு. ஜைன சமயம் குஜராத்தில் பலமாக பரவி