பக்கம் எண் :

236சத்திய சோதனை

Untitled Document
இந்தியன்,      ஆண்மையுடன்   எதிர்த்தும் போராடுவான் என்பது
நிரூபிக்கப்பட்டுவிட்ட உடனே அவன்,       தங்கள் நலத்துக்கு ஓர்
ஆபத்து என்றும்    வெள்ளைக்காரர்கள் கருதலானார்கள். நேட்டால்
சட்டசபையில்    இரு மசோதாக்களைக் கொண்டு வந்தார்கள். அதில்
ஒன்று, இந்திய வர்த்தகர்களுக்குப் பாதகம்     விளைவிக்கக்கூடியது;
மற்றொன்று, இந்தியர் வந்து   குடியேறுவதற்கு கடுமையான தடையை
விதிப்பது.    வாக்குரிமைக்காக         நடத்திய போராட்டத்தினால்
அதிர்ஷ்டவசமாக ஒரு பலன் ஏற்பட்டிருந்தது.அதாவது, நிறம் அல்லது
இனத்தைக்       குறித்துச் சட்டம் பேதம் காட்டக் கூடாதாகையால்,
இந்தியர் என்ற வகையில்         அவர்களுக்கு விரோதமாக எந்தச்
சட்டமும் செய்யக்கூடாது     என்று முடிவாகி இருந்தது. ஆகையால்,
மேற்கண்ட     மசோதாக்களின் வாசகம், எல்லோருக்கும் அச்சட்டம்
அமுலாகும்    என்ற முறையில் இருந்தது. ஆனால், அவர்களுடைய
உண்மையான நோக்கம்,         நேட்டாலில் இருக்கும் இந்தியருக்கு
மேற்கொண்டும் நிர்பந்தங்களை உண்டாக்குவதேயாகும்.

     இம் மசோதாக்கள், எனக்கு இருந்த  பொது வேலையை அதிக
அளவுக்கு    அதிகமாக்கிவிட்டன.  சமூகம்,   எப்பொழுதையும்விட
நன்றாகத் தன் கடமையை   உணர்ந்திருக்கும்படியும் இவை செய்தன.
அம் மசோதாக்களில்       மறைந்திருந்த     விஷம நோக்கத்தைச்
சமூகத்தினர்      அறியும்படி செய்வதற்காக,   அவைகளை இந்திய
மொழிகளில் மொழிபெயர்த்து,      முற்றும் விளக்கியும் வைத்தோம்.
குடியேற்ற நாட்டு மந்திரிக்கு   விண்ணப்பித்துக் கொண்டோம். இதில்
தலையிட அவர்           மறுத்துவிட்டதால், மசோதாக்கள் சட்டம்
ஆகிவிட்டன.

     நேரம் முழுவதையும் அநேகமாக நான்    பொது வேலைக்கே
செலவிட வேண்டியதாயிற்று.      நான் முன்பு     கூறியது போல்,
ஸ்ரீ மன்சுக்லால் நாஸர், டர்பனுக்கு முன்பே வந்து விட்டதால், அவர்
என்னுடன் தங்கலானார். தம் நேரத்தை அவர்  பொது வேலைகளில்
செலவிட்டதால் ஓரளவுக்கு எனக்கு இருந்த வேலை குறைந்தது.

     நான் இல்லாதிருந்த சமயத்தில்   எனக்குப் பதிலாக காங்கிரஸ்
காரியதரிசியாக     இருந்த சேத் ஆதம்ஜி மியாகான், போற்றத்தக்க
வகையில் தமது கடமையை  நிறைவேற்றியிருந்தார். அங்கத்தினர்கள்
தொகையை அதிகமாக்கியிருந்தார். அதோடு,     நேட்டால் இந்தியக்
காங்கிரஸின் நிதியிலும் சுமார் ஆயிரம் பவுன்  அதிகமாக்கியிருந்தார்.
இம் மசோதாக்களினாலும், நாங்கள்    கப்பலிலிருந்து இறங்கியபோது
நடந்த ஆர்ப்பாட்டங்களினாலும்      இந்தியரிடையே ஏற்பட்டிருந்த
விழிப்பை நான்         நல்ல வழியில் பயன்படுத்திக் கொண்டேன்.
அங்கத்தினர்கள்      அதிகமாகச் சேருவதுடன் பணமும் வேண்டும்
என்று கோரிக்கை விடுத்தேன்.       இப்பொழுது நிதி 5,000 பவுன்
ஆயிற்று. காங்கிரஸு க்கு      நிரந்தரமான நிதியைத் திரட்டி, அந்த