பக்கம் எண் :

262சத்திய சோதனை

மற்ற இடங்களிலோ, என்னிடம் மரியாதை  காட்டினார்கள். ஆனால்,
நான் கூறிய யோசனைகளை      அவர்கள் பொருட்படுத்தவில்லை.
தங்களைச்       சுற்றியுள்ள இடங்களைச்   சுத்தமாக வைத்திருக்க
வேண்டும் என்பதில்     முயற்சி எடுத்துக்கொள்ளுவது, மக்களுக்கு
அதிகக் கஷ்டமாகவே இருந்தது. இந்த வேலைக்கு அவர்கள் பணம்
செலவு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கே இல்லை.   அளவற்ற
பொறுமையினாலன்றி         இந்த மக்கள்      எந்த வேலையும்
செய்யும்படியாகச்          செய்வது   முடியாத காரியம் என்பதை,
மற்றெல்லாவற்றையும்விட இந்த அனுபவங்கள்,    எனக்கு நன்றாகப்
போதித்தன.     சீர்திருத்த வேண்டும்             என்ற கவலை,
சீர்திருத்தக்காரருக்குத்தான்          உண்டு. சமூகம் அதைப்பற்றிக்
கவலைப்படுவதில்லை. ஆனால்,         அவர் சமூகத்தினிடமிருந்து
எதிர்ப்பையும்,           வெறுப்பையும்,    உயிருக்கே அபாயமான
கொடுமைகளையும் தவிர     வேறு எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை.
சீர்திருத்தக்காரர், தம்  உயிரினும் முக்கியமானது என்று கருதும் ஒரு
சீர்திருத்தத்தை மிகவும் பிற்போக்கானது என்று       கூடச் சமூகம்
கருதிவிடலாம் அல்லவா?

     என்றாலும், இந்தக் கிளர்ச்சியின் பயனாக இந்திய சமூகத்தினர்,
தங்கள் வீடு வாசல்களையும்         சுற்றுப்புறங்களையும் சுத்தமாக
வைத்திருக்க வேண்டியதன்          அவசியத்தை ஒருவாறு கற்றுக்
கொண்டார்கள். அதிகாரிகளின்     நன்மதிப்பும் எனக்கு ஏற்பட்டது.
இருக்கும் குறைகளை எடுத்துக்கூறி    உரிமைகளை வற்புறுத்துவதே
என் வேலையாக இருந்தாலும்,  சுயத் தூய்மையைச் சமூகம் அடைய
வேண்டும் என்பதிலும் நான் சிரத்தையுடன்      விடாப் பிடியாகவும்
இருந்ததை அவர்கள் கண்டார்கள்.

     ஆயினும், செய்து தீரவேண்டிய        ஒரு வேலை இன்னும்
பாக்கியாகவே இருந்தது.     நாடு கடந்து வந்திருக்கும் இந்தியர்கள்,
தாய்        நாட்டுக்குத் தாங்கள்   செய்தாக வேண்டிய கடமையை
உணரும்படி செய்வதே         அந்த வேலை. இந்தியா ஏழை நாடு.
செல்வத்தைத் தேடுவதற்காக இந்தியர்கள்    தென்னாப்பிரிக்காவிற்கு
வந்தார்கள்.    தாய்நாட்டு மக்களுக்குக் கஷ்டம் ஏற்படும் சமயத்தில்,
இந்த இந்தியர், தங்கள் வருவாயில்   ஒரு பகுதியை அளித்துத் தாய்
நாட்டுக்கு உதவ வேண்டியது   அவர்களுடைய கடமையாகும். 1897,
1899-ஆம் ஆண்டுகளில்         இந்தியாவில் பயங்கரமான பஞ்சம்
ஏற்பட்டபோது,      தென்னாப்பிரிக்க இந்தியர்கள், இந்த உதவியைச்
செய்தனர். பஞ்ச நிவாரண வேலைகளுக்குத் தாராளமாகப் பண உதவி
செய்தார்கள். 1897-ஆம்        ஆண்டில் செய்ததைவிட 1899-ஆம்
ஆண்டில் அதிக உதவி செய்தனர்.         இதற்கு ஆங்கிலேயரும்
பணஉதவி செய்ய வேண்டும்       என்று கோரினோம். அவர்களும்
தாராளமாக உதவ முன்வந்தனர். இந்திய   ஒப்பந்தத் தொழிலாளரும்,