பக்கம் எண் :

284சத்திய சோதனை

Untitled Document
உட்கார்ந்தோம்.

     “இந்த உயிர்ப்பலியை மதம் என்று   நீங்கள் கருதுகிறீர்களா?”
என்று கேட்டேன்.

     “மிருகங்களைக்     கொல்லுவதை     மதம் என்று யாராவது
கருதுவார்களா?” என்றார், அவர்.

     “அப்படியானால், அதை எதிர்த்து நீங்கள்     ஏன் பிரச்சாரம்
செய்யக் கூடாது?”

     “அது என் வேலை அல்ல.      கடவுளை வழிபடுவதே நமது
வேலை”.

     “கடவுளை வழிபடுவதற்கு            உங்களுக்கு வேறுஇடம்
கிடைக்கவில்லையா?”

     “எங்களுக்கு எல்லா இடமும்        நல்ல இடந்தான். மக்கள்,
ஆடுகளைப்  போலத் தலைவர்கள் இட்டுச் செல்லும் இடங்களுக்குப்
போய்க்கொண்டிருக்கின்றனர்.        சாதுக்களாகிய எங்கள் வேலை
அதுவன்று.”

     இந்த விவாதத்தை நாங்கள் வளர்த்துக்  கொண்டிருக்கவில்லை.
கோயிலுக்குப் போனோம். ரத்த ஆறுகள் எங்களை  எதிர் கொண்டு
அழைத்தன. அங்கே நிற்கவே       என்னால் முடியவில்லை. நான்
ஆத்திரமடைந்தேன்; அமைதியையும்      இழந்துவிட்டேன். அந்தக்
காட்சியை என்றும் நான் மறக்கவே இல்லை.

     அன்று மாலையே சில         வங்காளி நண்பர்கள் என்னை
விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அங்கே   ஒரு நண்பரிடம், இந்தக்
கொடூரமான வழிபாட்டு முறையைக்   குறித்துச் சொன்னேன். அதற்கு
அவர் கூறியதாவது: “ஆடுகளுக்குத்    துன்பமே தெரியாது. பேரிகை
முழக்கமும் மற்ற சப்தங்களும் அவைகளுக்கு    துன்ப உணர்ச்சியே
இல்லாதபடி செய்து விடுகின்றன.”

     இதை        ஒப்புக்கொண்டுவிட    என்னால் முடியவில்லை.
“ஆடுகளுக்கு வாயிருந்தால் அவை     வேறு கதையைச் சொல்லும்”
என்றேன். அக்கொடூரமான பழக்கம் நின்றாக     வேண்டும் என்றும்
எண்ணினேன். புத்தரின்           கதையை நினைத்தேன். ஆனால்,
இவ்வேலை என் சக்திக்கு அப்பாற்பட்டது   என்பதையும் கண்டேன்.

     அன்று எனக்கு இருந்த    அபிப்பிராயமே இன்றும் இருக்கிறது.
மனிதனுடைய உயிரைவிட ஓர்      ஆட்டுக் குட்டியின் உயிர் எந்த
வகையிலும் குறைவானதாக        எனக்குத் தோன்றவில்லை. மனித
உடலுக்கு ஓர் ஆட்டின்             உயிரைப் போக்குவதற்கு நான்
உடன்படக்கூடாது. ஒரு பிராணி எவ்வளவுக்கெவ்வளவு ஆதரவற்றதாக
இருக்கிறதோ     அவ்வளவுக்கு அது, மனிதனின் கொடுமையிலிருந்து
காக்கப்படுவதற்கு      உரிமைப் பெற்றிருக்கிறது என்று கருதுகிறேன்.
அத்தகைய சேவையைச் செய்வதற்குத் தன்னைத்       தகுதியாக்கிக்
கொள்ளாதவர், அதற்கு எவ்விதப் பாதுகாப்பையும்       அளித்துவிட