பக்கம் எண் :

298சத்திய சோதனை

Untitled Document
சிகிச்சை முறைகளைக்   கையாண்டு பார்க்கப் போகிறேன். ஆனால்,
சிறுவனின் நாடித்துடிப்பு, இருதயம்,     நுரையீரல் ஆகியவைகளைச்
சோதித்துப் பார்த்து   நிலையை அறிந்துகொள்ள எனக்குத் தெரியாது.
தாங்கள் அவ்வப்போது வந்து        அவனைச் சோதித்துப் பார்த்து
இருக்கும் நிலையை             எனக்கு அறிவிப்பீர்களாயின் நான்
நன்றியுள்ளவனாவேன்.”

     நல்லவரான அந்த டாக்டர்         எனக்கிருந்த கஷ்டங்களை
உணர்ந்து கொண்டார். என் கோரிக்கைக்கும் சம்மதித்தார். இதில் ஒரு
முடிவுக்கு வருவதற்கான வயது மணிலாலுக்கு இல்லையாயினும், நானும்
டாக்டரும்          பேசிக்கொண்டிருந்ததை அவனுக்குக்கூறி அவன்
அபிப்பிராயத்தையும் கேட்டேன். உங்களுடைய   நீர்ச்சிகிச்சையையே
செய்யுங்கள். எனக்கு முட்டையோ,          கோழிக்குஞ்சு சூப்போ
வேண்டாம்” என்றான்.

     இந்த இரண்டில் அவனுக்கு நான் எதைக்   கொடுத்திருந்தாலும்
அவன் சாப்பிட்டிருப்பான் என்பது    எனக்குத் தெரியும். என்றாலும்,
அவன் சொன்னது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.

     கூனே என்பவரின் சிகிச்சை முறை   எனக்குத் தெரியும். நான்
அதைச் செய்தும் பார்த்திருக்கிறேன்.        பட்டினி போடுவதையும்
பயனுள்ள வகையில் உபயோகித்துக்  கொள்ளலாம் என்பது எனக்குத்
தெரியும். ஆகவே,        கூனேயின் முறைப்படி     மணிலாலுக்கு
ஆசனக்குளிப்புச் (Hip Baths) செய்வித்தேன். தொட்டியில்  அவனை
மூன்று நிமிடங்களுக்கு        மேல் வைத்திருப்பதில்லை. அத்துடன்
ஆரஞ்சுப் பழ ரசத்துடன் தண்ணீர் கலந்து மூன்று நாட்கள் கொடுத்து
வந்தேன்.

     ஆனால், சுரம் குறையவில்லை; 104டிகிரிக்கும் ஏறியது.  இரவில்
ஜன்னி வேகத்தில்     பிதற்றிக்கொண்டிருந்தான்.      எனக்கு ஒரே
கவலையாகிவிட்டது.      என்னை  ஊரார் என்ன சொல்லுவார்கள்?
என்னைப்பற்றி என்         தமையனார்தான்    என்ன நினைத்துக்
கொள்ளுவார்?      வேறு ஒரு டாக்டரையாவது கூப்பிடக் கூடாதா?
ஆயுர்வேத  வைத்தியரை ஏன் கொண்டு வரக்கூடாது? தங்களுடைய
கொள்கைப்   பித்துக்களையெல்லாம்     குழந்தைகள்மீது  சுமத்தப்
பெற்றோருக்கு என்ன உரிமை இருக்கிறது?

     இது போன்ற     எண்ணங்களெல்லாம்     ஓயாமல் என்னை
அலைக்கழித்துக்கொண்டிருந்தன.         பிறகு இதற்கு நேர்மாறான
எண்ணங்களும் தோன்றும். எனக்கு     என்னவிதமான சிகிச்சையை
நான் செய்துகொள்ளுவேனோ அதையே என்   மகனுக்கும் செய்வது
குறித்துக் கடவுள் நிச்சயம் திருப்தியடைவார்.     நீர்ச் சிகிச்சையில்
எனக்கு   நம்பிக்கை இருந்தது. மாற்று மருந்து கொடுக்கும் வைத்திய
முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை.       குணமாகிவிடும் என்று
டாக்டர்களாலும் உத்திரவாதம் அளிக்க