பக்கம் எண் :

320சத்திய சோதனை

Untitled Document
அனுமதிக்க முடியும்? அவர் என்னை  மாத்திரமே அறிவார். எனவே
அவர் நஷ்டத்தை ஈடு செய்தேன்.

     இந்தக் கொடுக்கல் வாங்கலைக்       குறித்து நண்பரான ஒரு
கட்சிக்காரரிடம்         நான் கூறியபோது,     அவர் நயமாக என்
அசட்டுத்தனத்தைக் கண்டித்தார்.           அதிர்ஷ்டவசமாக நான்
அப்பொழுது ‘மகாத்மா’ ஆகிவிடவில்லை.      ‘பாபு’ (தந்தை) ஆகி
விடவுமில்லை. நண்பர்கள் அன்போடு    என்னை ‘பாய்’ (சகோதரர்)
என்றே  அழைத்து வந்தார்கள். அந்த நண்பர் கூறியதாவது: “நீங்கள்
இப்படிச் செய்திருக்கக்கூடாது. நாங்கள் எத்தனையோ காரியங்களுக்கு
உங்களை     நம்பியிருக்கிறோம். இத்தொகை உங்களுக்குத் திரும்பக்
கிடைக்கப் போவதில்லை. உங்கள் கையிலிருந்து  நீங்கள் அவருக்குக்
கொடுத்துவிடுவீர்கள்.               ஆனால், உங்கள் சீர்திருத்தத்
திட்டங்களுக்கெல்லாம்       உங்கள் கட்சிக்காரர்களின் பணத்தைக்
கொண்டு உதவி               செய்துகொண்டே போவீர்களானால்,
அக் கட்சிக்காரர்கள் அழிந்து போவதோடு    நீங்களும் சீக்கிரத்தில்
பிச்சையெடுக்கும் நிலைமைக்கு வந்துவிடுவீர்கள்.   ஆனால், நீங்கள்
எங்கள் தருமகர்த்தா.      இதை நீங்கள் அறிவீர்கள்.      நீங்கள்
பிச்சைக்காரராகிவிட்டால், நமது    பொது வேலைகளெல்லாம் நின்று
போய்விடும்.”

     இந்த நண்பர் இன்னும்     உயிருடன் இருக்கிறார் என்பதைச்
சந்தோஷத்துடன்                   தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
தென்னாப்பிரிக்காவிலோ, வேறு எங்குமோ,        அவரைப்போலத்
தூய்மையானவரை நான் இன்னும் கண்டதில்லை. தாம் யார் மீதாவது
சந்தேகம் கொள்ள நேர்ந்து,     தாம் சந்தேகித்தது சரியல்ல என்று
பிறகு கண்டு கொண்டால்,   அவர் அவர்களிடம் போய் மன்னிப்புக்
கேட்டுக்கொண்டு தம் மனத்தைத்   தூய்மைப்படுத்திக் கொள்ளுவார்.
இதை அவர்        பன்முறை செய்து நான்    பார்த்திருக்கிறேன்.

     அவர் எனக்குச் சரியானபடி     எச்சரிக்கை செய்திருக்கிறார்.
என்பதைக் கண்டேன். ஏனெனில்,     பத்ரிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை
நான் ஈடு செய்துவிட்டேனாயினும்,  இதே போன்ற வேறு நஷ்டத்தை
நான் சமாளிக்க முடியாமல் போயிருக்கும்.    அந்நிலைமையில் நான்
கடன்பட          நேர்ந்திருக்கும்.    கடன்படுவது என்பதை என்
வாழ்க்கையில் நான்            என்றுமே செய்ததில்லை. அத்துடன்
கடன்படுவதை எப்பொழுதுமே    நான் வெறுத்தும் வந்திருக்கிறேன்.
ஒருவருடைய சீர்திருத்த உற்சாகம்கூட,  அவர் தம் எல்லையை மீறிப்
போய்விடும்படி செய்துவிடக் கூடாது என்பதை  நான் உணருகிறேன்.
பிறர் நம்பிக் கொடுத்திருந்த பணத்தை    இன்னொருவருக்குக் கடன்
கொடுத்ததன் மூலம், கீதையின்      முக்கியமான உபதேசத்தை மீறி
நடந்து    விட்டேன் என்றும் கண்டேன். “பயனை எதிர்பாராது உன்
கடமையைச் செய்” என்பதே        கீதையின் உபதேசம். இத்தவறு