பக்கம் எண் :

322சத்திய சோதனை

Untitled Document
சாப்பிடாமல் இருந்துவிட்டால்,      எனக்குத் தலைவலி ஏற்படாமல்
இருக்கக்கூடும் என்று எண்ணினேன். ஆகவே,  இதை அனுசரித்துப்
பார்த்தேன். சில தினங்களுக்கு        இது கஷ்டமாகவே இருந்தது.
ஆனால், தலைவலி அடியோடு மறைந்து போய்விட்டது.  இதிலிருந்து,
எனக்குத்           தேவையானதற்கு  அதிகமாக நான் சாப்பிட்டு
வந்திருக்கிறேன் என்ற முடிவுக்கு வந்தேன்.

     ஆயினும், இந்த மாறுதலினால் எனக்கு இருந்த   மலச் சிக்கல்
உபத்திரவம் நீங்கியபாடில்லை.        கூனேயின் ஆசனக் குளியல்
முறையை அனுசரித்துப் பார்த்தேன்.     இதனால், கொஞ்சம் குணம்
தெரிந்ததென்றாலும் முழுவதும் குணமாகவில்லை.   இதற்கு மத்தியில்
சைவ உணவுச்சாப்பாட்டு       விடுதி வைத்திருந்த ஜெர்மானியரோ
அல்லது  வேறு ஒரு நண்பரோ - யார் என்பதை மறந்துவிட்டேன் -
ஜஸ்ட் என்பவர் எழுதிய ‘இயற்கைக்குத் திரும்புக’ என்ற புத்தகத்தை
எனக்குக் கொடுத்தார். மண்  சிகிச்சையைக் குறித்து இப் புத்தகத்தில்
படித்தேன். மனிதனுக்கு          இயற்கையான உணவு பழங்களும்
கொட்டைகளுமே என்று அதன்   ஆசிரியர் கூறியிருந்தார். பழங்கள்
மாத்திரமே          சாப்பிடுவது என்ற பழக்கத்திற்கு நான் உடனே
போய்விடவில்லை. ஆனால்,     மண் சிகிச்சை முறைகளை உடனே
பரீட்சிக்க ஆரம்பித்தேன்.        அற்புதமான பலனைக் கண்டேன்.
சுத்தமான மண்ணைக்      குளிர்ந்த நீரில் நனைத்துப் பிறகு அதை
மெல்லிய துணியில்   நன்றாகத் தடவி அதை எடுத்து அடி வயிற்றில்
கட்டிக் கொள்ளுவது என்பது    மண் சிகிச்சை முறைகளுள் ஒன்று.
படுக்கப் போகும்போது            இவ்வாறு அடிவயிற்றில் கட்டிக்
கொள்ளுவேன். பிறகு இரவிலோ அல்லது       காலையிலோ நான்
விழித்துக் கொள்ளும்போது அதை நீக்கிவிடுவேன்.   இதனால் நல்ல
குணம் ஏற்பட்டது. அது முதல் இந்தச்     சிகிச்சையை என்னுடைய
நண்பர்களுக்கும்               செய்து வந்திருக்கிறேன். இதற்காக
வருத்தப்படுவதற்கு எவ்விதக் காரணமும் ஏற்பட்டதே இல்லை. அதே
நம்பிக்கையுடன்    இந்தச் சிகிச்சை முறையை அனுசரித்துப் பார்க்க
என்னால் முடியாது போயிற்று. இதற்கு    ஒரு முக்கியமான காரணம்,
இந்தச் சோதனைகளைச் செய்து பார்ப்பதற்கு     ஓர் இடத்தில் நான்
தங்கி நிலைபெற்றிருக்க    முடியாது போனதேயாகும். என்றாலும் நீர்,
மண் சிகிச்சையில்           எனக்கு இருக்கும் நம்பிக்கை மாத்திரம்
எப்பொழுதும்போல மாறாமல் இருந்து கொண்டிருக்கிறது.  இன்றுங்கூட
ஓரளவுக்கு எனக்கு மண் சிகிச்சை  செய்துகொண்டுதான் வருகிறேன்.
சமயம் நேரும் பொழுதெல்லாம் என்     சக ஊழியர்களுக்கும் இந்த
சிகிச்சை முறையை சிபாரிசு செய்துகொண்டும் வருகிறேன்.

     என் வாழ்நாளில் இரு முறை     கடுமையான நோய்க்கு நான்
ஆளாகியிருக்கிறேன். என்றாலும்,        மருந்து சாப்பிட வேண்டிய