பக்கம் எண் :

338சத்திய சோதனை

Untitled Document
என்ற நிச்சயம் எனக்கு இல்லை. என்றாலும்,      முயன்று பார்ப்பது
என்று தீர்மானித்தேன். எனக்குத் தெரிந்த      டைப்ரைட்டர் தரகர்
ஒருவரிடம்   சென்றேன். சுருக்கெழுத்தும் தெரிந்த டைப் அடிப்பவர்
ஒருவர் எனக்குத் தேவை என்று    அவரிடம் கூறினேன். பெண்கள்
கிடைப்பார்கள் என்றும், ஒரு பெண்ணை     ஏற்பாடு செய்வதாகவும்
அவர் சொன்னார்.           ஸ்காட்லாந்திலிருந்து அப்பொழுதுதான்
வந்தவரான குமாரி டிக் என்ற          பெண்ணைப் பார்த்து அவர்
விசாரித்தார். அப் பெண்ணுக்குப் பணம் தேவை.        ஆகையால்,
யோக்கியமான பிழைப்பு எங்கே கிடைத்தாலும்   வேலை பார்ப்பதில்
அவளுக்கு ஆட்சேபமில்லை. எனவே, அந்தத் தரகர் அப்பெண்ணை
என்னிடம் அனுப்பினார்.    அப்பெண்ணைப் பார்த்ததுமே எனக்குப்
பிடித்துப் போய்விட்டது.

     “இந்தியரின் கீழ் ஊழியம் பார்ப்பதில்    உமக்கு  ஆட்சேபம்
உண்டா?” என்று அப்பெண்ணைக் கேட்டேன்.

     “இல்லவே இல்லை” என்று அவர்      உறுதியாகக் கூறினார்.

     “என்ன சம்பளம் நீர் எதிர்பார்க்கிறீர்?”

     “ஏழரைப் பவுன் கேட்டால் அது உங்களுக்கு   அதிகமானதாக
இருக்குமா?”

     “உம்மிடமிருந்து நான் விரும்பும் வேலையை   அளிப்பீரானால்,
அச் சம்பளம் அதிகமானதாகாது. எப்பொழுது       வேலைக்கு வர
முடியும்?”

     “நீங்கள் விரும்பினால் இந்த நிமிடத்திலேயே.”

     நான் அதிகத் திருப்தி அடைந்துவிட்டேன்.   எழுத வேண்டிய
கடிதங்களை அவளுக்கு                  அப்பொழுதே சொல்ல
ஆரம்பித்துவிட்டேன்.

     அப்பெண் டைப் அடிப்பவர்     என்பதற்குப் பதிலாக வெகு
சீக்கிரத்திலேயே எனக்கு ஒரு மகள் அல்லது      சகோதரி போல்
ஆகிவிட்டார். அவர் செய்த வேலை       பற்றிக் குறைகூற எந்தக்
காரணமும் எனக்கு இல்லை. ஆயிரக்கணக்கான  பவுன் தொகையை
நிர்வகிக்கும் பொறுப்பும் அடிக்கடி அவரிடம்   ஒப்படைக்கப்பட்டது
உண்டு. கணக்குகள் வைத்துக் கொள்ளுவதும்,     அவர்தான். என்
முழு நம்பிக்கையையும் அவர் பெற்றுவிட்டார்.      இன்னும் அதிக
முக்கியமானது என்னவென்றால், அவர் தமது   மனத்திற்குள்ளிருந்த
எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கூட   என்னிடம் கூறிவந்தார்.
முடிவாகத் தமக்குக் கணவனைத்   தேர்ந்தெடுத்துக்கொள்வதில் என்
ஆலோசனையையும் நாடினார்.           அவரைக் கன்னிகாதனம்
செய்துகொடுக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.    குமாரி டிக்,
ஸ்ரீமதி மெக்டானல்டு ஆனதும்     என்னை     விட்டுப்போய்விட
வேண்டியதாயிற்று. ஆனால்,      விவாகமான பிறகும் கூட வேலை
அதிகமாக இருக்கும்போது கூப்பிட்டால்