பக்கம் எண் :

34சத்திய சோதனை

Untitled Document

சித்தம் வேறுவிதமாக இருந்து விட்டது. சாவு நிச்சயம் என்று இருக்கும்
போது சரியான  பரிகாரம் யாருக்குத் தோன்றும்? சத்திர சிகிச்சைக்குச்
சேகரிக்கப்பட்டு,      இப்பொழுது வீணாகப்போன பொருளுடன் என்
தந்தை           பம்பாயிலிருந்து திரும்பினார்.   இனி அதிக காலம்
உயிரோடிருப்போம்      என்ற நம்பிக்கை    அவருக்கும் இல்லாமல்
போயிற்று. மேலும் மேலும்  பலவீனமாகிக் கொண்டு வந்தார். இதனால்
மலஜலங்களைப் படுக்கையில் இருந்தவாறே கழிக்கும் படி அவருக்குச்
சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால்,  கடைசி நேரம் வரையில் அவர்
அப்படிச் செய்ய மறுத்து விட்டார். அதிக  சிரமத்துடன் பிடிவாதமாகப்
படுக்கையிலிருந்து எழுந்து போயே        மலஜலம் கழித்து வந்தார்.
வைஷ்ணவ தருமத்தின்          புறத் தூய்மையைப் பற்றிய விதிகள்
அவ்வளவு கண்டிப்பானவை.

     இத்தகைய சுத்தம்     முற்றும் அவசியமே என்பதில் சந்தேகம்
இல்லை. ஆனால், சுத்தத்தைக்          கண்டிப்பாக அனுசரிப்பதும்,
நோயாளிக்குக்            கொஞ்சமேனும் அசௌகரியம் இல்லாமல்
படுக்கையையும் கொஞ்சமும்        அப்பழுக்கு இல்லாமல் வைத்துக்
கொண்டு,      குளிப்பது உட்பட      எல்லாக்    காரியங்களையும்
படுக்கையிலேயே செய்யலாம் என்பதை மேனாட்டு வைத்திய சாத்திரம்
நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.    அத்தகைய சுத்தம் வைஷ்ணவ
தருமத்திற்கு முற்றும் பொருத்தமானது   என்றே நாம் கருத வேண்டும்.
ஆனால்,   படுக்கையைவிட்டு எழுந்து போயே ஆகவேண்டும் என்று
என் தந்தையார்     வற்புறுத்தியது           அப்பொழுது எனக்கு
ஆச்சரியத்தையே  உண்டாக்கியது.  அதை நான்  வியந்தேனேயன்றி
வேறுவிதமாகக் கருதவில்லை.

     பயங்கரமான அந்த இரவும்     வந்தது. என் சிறிய தகப்பனார்
அப்பொழுது ராஜ்கோட்டில் இருந்தார்.   என் தந்தையின் தேக நிலை
மோசமாகிக்        கொண்டிருக்கிறதென்ற     செய்தியறிந்து அவர்
ராஜ்கோட்டுக்கு    வந்ததாக   எனக்குக் கொஞ்சம் ஞாபகம். இந்தச்
சகோதரர்கள்    ஒருவருக்கொருவர் பலமான அன்பு கொண்டவர்கள்.
என் சிற்றப்பா, நாளெல்லாம் என்         தந்தையாரின் படுக்கைக்கு
அருகிலேயே  உட்கார்ந்திருப்பார். எங்களையெல்லாம் தூங்கப் போகச்
சொல்லிவிட்டு,      அவர் மட்டும் என் தந்தையாரின் படுக்கைக்குப்
பக்கத்திலேயே   பிடிவாதமாகப் படுத்துக் கொள்ளுவார். தந்தையாரின்
நிலை என்னவோ   ஆபத்தாகவே இருந்தது. ஆனால், அது எமனின்
இரவாக இருக்கும் என்று யாரும் கனவுகூடக் காணவில்லை.

     அப்பொழுது         இரவு 10.30    அல்லது  11 மணி. நான்
தந்தையாருக்குக் கால் பிடித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பதிலாக
அவ்வேலையைத் தாம்         பார்த்துக் கொள்ளுவதாக என் சிறிய
தகப்பனார் கூறினார். மகிழ்ச்சியுற்றேன். நேரே படுக்கையறைக்குப்