பக்கம் எண் :

342சத்திய சோதனை

Untitled Document
என்று நினைக்கவே இல்லை.  ஆனால், பண உதவி இல்லாமல் அது
நடந்துகொண்டு போக முடியாது       என்பதைச் சீக்கிரத்திலேயே
கண்டுகொண்டேன். பெயரைப் பொறுத்த வரையில் இப்பத்திரிகைக்கு
நான் ஆசிரியன் அல்ல என்றாலும்    அதை நடத்துவதற்கு முழுப்
பொறுப்பாளியாக இருப்பது நான்தான்        என்பதை இந்தியரும்,
ஐரோப்பியரும் நன்கு அறிவார்கள்.            இப் பத்திரிகையை
ஆரம்பிக்காமலேயே இருந்திருந்தாலும்      பரவாயில்லை. ஆனால்,
ஆரம்பித்துவிட்ட பிறகு            அதை நிறுத்தி விடுவதென்பது
நஷ்டத்தோடு வெட்கக் கேடுமாகும். ஆகவே, என் பணத்தை அதில்
போட்டுக் கொண்டே போனேன். முடிவில்     நான் மிச்சம் பிடித்து
வைத்திருந்த பணத்தையெல்லாம் அதிலேயே போட்டு விட நேர்ந்தது.
ஒரு சமயம் மாதத்திற்கு 75 பவுன் நான் அனுப்ப வேண்டியிருந்ததும்
எனக்கு நினைவிருக்கிறது.

     இப் பத்திரிகை சமூகத்திற்கு நல்ல    சேவை செய்திருக்கிறது
என்பதை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்  நான் உணருகிறேன்.
லாபத்திற்கு நடத்தும் வர்த்தக ஸ்தாபனமாக அது இருக்க வேண்டும்
என்ற நோக்கம் என்றும் இருந்ததில்லை.    என்னால் நடத்தப்பட்டு
வந்தவரையில் அப் பத்திரிகையில் ஏற்பட்ட மாறுதல்கள், என்னிடம்
ஏற்பட்ட மாறுதல்களுக்கு அடையாளங்களாக இருந்தன. இப்பொழுது
‘எங் இந்தியா’ வும், ‘நவஜீவ’னும் இருப்பதைப்போல்  அந்த நாளில்
‘இந்தியன் ஒப்பீனியன்’       என் வாழ்க்கையின் ஒரு பகுதியைக்
காட்டும் கண்ணாடி போல் இருந்து வந்தது. அதன் பத்திகளில் பிரதி
வாரமும் என்       ஆன்ம உணர்ச்சிகளைக்   கொட்டி வந்தேன்.
சத்தியாக்கிரகக் கொள்கையையும் அதன் அனுஷ்டானத்தையும் நான்
அறிந்திருந்த வகையில் அதில் வெளியிட்டு வந்தேன். பத்து  வருட
காலத்தில், அதாவது 1914-ஆம்        ஆண்டு வரையில், சிறைச்
சாலைக்குள் எனக்குக் கிடைத்த கட்டாய   ஓய்வைத் தவிர மற்றச்
சமயங்களில், என்னுடைய கட்டுரை இடம்      பெறாத ‘இந்தியன்
ஒப்பீனியன்’ இதழே இல்லை.         நான் தீர யோசிக்காமலோ,
வேண்டும் என்றே மிகைப்படுத்தியோ,      திருப்திப்படுத்துவதற்கு
மாத்திரம் என்றோ     அக்கட்டுரைகளில் ஒரு வார்த்தையைக்கூட
எழுதியதாக எனக்கு நினைவு இல்லை. எனக்கு     அப்பத்திரிகை
தன்னடக்கத்திற்கு ஒரு பயிற்சியாக இருந்தது என்பதில்   சந்தேகம்
இல்லை.        நண்பர்களுக்கோ,     என் கருத்துடன் தொடர்பு
கொள்ளுவதற்கு அது                 ஒரு சாதனமாக இருந்தது.
குற்றங் கண்டுபிடிப்பவர்களுக்கு,       அதில் ஆட்சேபிக்கத் தக்க
விஷயங்கள் அதிகம் கிடைப்பதில்லை. உண்மையில்     ‘இந்தியன்
ஒப்பீனியனி’ன் நேர்மையான போக்கு, குற்றங் கூறுவோரும் தங்கள்
பேனாவை         அடக்கிக்கொள்ளும்படி செய்தது.   ‘இந்தியன்
ஒப்பீனியன்’ இல்லாமல் சத்தியாக்கிரகம்       சாத்தியமில்லாமலும்