பக்கம் எண் :

346சத்திய சோதனை

Untitled Document
அந்த இடத்தில்        குடியிருக்கும் உரிமையை இந்தியரிடமிருந்து
பறித்துவிட உள்ளூர்ச்     சட்டசபையின் அதிகாரத்தையும் பெற்றது.
நான்        ஜோகன்னஸ்பர்க்கில் குடியேறியபோது அங்கே இருந்த
நிலைமை இதுவே.

     குடியேறியிருந்தவர்களுக்குத்        தங்கள் சொந்த நிலத்தில்
சொத்துரிமை இருந்ததால்          இயற்கையாகவே நஷ்டஈடு பெற
வேண்டியவர்களாகின்றனர்.            சில ஆர்ஜித வழக்குகளை
விசாரிப்பதற்கு என்று ஒரு      விசேட நீதிமன்றம் அமைத்தார்கள்.
நகரசபை கொடுக்க        முன்வரும் தொகையை ஏற்றுக்கொள்ளத்
தயாராக இல்லாத      இந்தியருக்கு அந்த நீதிமன்றத்திடம் அப்பீல்
செய்துகொள்ள உரிமை உண்டு.     அந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்
தொகை, நகரசபை கொடுக்க முன்வந்த            தொகையைவிட
அதிகமானதாக இருந்தால் நகரசபையே     செலவுத் தொகையையும்
கொடுக்க வேண்டும்.

     அங்கே குடியிருந்தவர்களான இந்தியரில் பெரும்பாலானவர்கள்
என்னையே      சட்ட ஆலோசகராக வைத்துக் கொண்டனர். இந்த
வழக்குகளின் மூலம் பணம் சம்பாதிக்க     எனக்கு விருப்பமில்லை.
ஆகையால், அவர்களிடம்      ஒன்று கூறினேன். வழக்கில் வெற்றி
பெற்றால், நீதிமன்றம்        என்ன செலவுத் தொகைக்குத் தீர்ப்புச்
செய்கிறதோ அதுவே எனக்குப் போதும்;         வழக்கின் முடிவு
எதுவானாலும் ஒவ்வொரு வழக்குக்கும்      எனக்குப் பத்து பவுன்
கட்டணம் கொடுக்க வேண்டும் என்று கூறினேன்.        அவர்கள்
இவ்விதம் கொடுக்கும் பணத்தில்       ஒரு பாதியை ஏழைகளுக்கு
வைத்திய சாலையோ அல்லது அத்தகைய      வேறு ஸ்தாபனமோ
ஆரம்பிக்க ஒதுக்கி வைத்துவிடப்        போகிறேன் என்பதையும்
அவர்களிடம் சொன்னேன்.           இயல்பாகவே இது அவர்கள்
எல்லோருக்கும் திருப்தியளித்தது.

     எழுபது வழக்குகளில்       ஒன்றுதான் தோற்றுப் போயிற்று.
ஆகவே,             பெருந்தொகையே கட்டணமாகக் கிடைத்தது.
வந்ததையெல்லாம் விடாமல் விழுங்கிக்கொண்டிருக்க     ‘இந்தியன்
ஒப்பீனியன்’ பத்திரிகை இருந்தது. இதுவரையில்   அது 1600 பவுன்
விழுங்கியிருக்கிறது என்பது              எனக்கு ஞாபகம். இந்த
வழக்குகளுக்காக         நான்   கஷ்டப்பட்டு வேலை செய்தேன்.
கட்சிக்காரர்கள்    எப்பொழுதும்             என்னைச் சூழ்ந்து
கொண்டிருப்பார்கள். இவர்களில்   பெரும்பான்மையோர், முன்னால்
பீகாரிலிருந்தும்               அதன்    சுற்றுப்புறங்களிலிருந்தும்,
தென்னிந்தியாவிலிருந்தும் வந்தவர்கள். தங்களுடைய குறைகளுக்குப்
பரிகாரம் தேடிக்கொள்ளுவதற்கென்று,      சுயேச்சையான இந்திய
வர்த்தகர்களின் சங்கத்தின்     தொடர்பு இல்லாமல், தனியாக ஒரு
சங்கத்தை அமைத்துக்கொண்டு    இருந்தார்கள். இவர்களில் சிலர்,