பக்கம் எண் :

348சத்திய சோதனை

Untitled Document
காரர்களாக இருந்தபோது சட்டத்திற்குப் பயந்துகொண்டாவது. ஏதோ
ஒரு வகையில்                 சூழ்நிலை  சுத்தமாக இருக்கும்படி
செய்யவேண்டியிருந்தது. நகர சபைக்கோ      அப்படிப்பட்ட பயம்
எதுவும் இல்லை! அங்கே குடியிருந்தோர்    தொகை அதிகமாயிற்று.
அதோடு ஆபாசமும் ஒழுங்கீனமும் பெருகின.

     நிலைமை இவ்வாறு இருந்து வந்ததைக் குறித்து      இந்தியர்
கொதிப்படைந்திருந்த சமயத்தில் அங்கே திடீரென்று கறுப்புப் பிளேக்
நோய் பரவியது. இந்த நோயை நிமோனிக் பிளேக் என்றும் கூறுவது
உண்டு. புபோனிக் பிளேக்கைவிட இது       மகா பயங்கரமானதும்
பிராணாபாயமானதுமாகும்.

     இந்த நோய் பரவுவதற்குக்         காரணமாக இருந்த இடம்,
அதிர்ஷ்டவசமாக                இந்தியர் குடியிருப்பு இடமன்று.
ஜோகன்னஸ்பர்க்குப் பக்கத்தில்           இருந்த தங்கச் சுரங்கம்
ஒன்றிலிருந்தே இந்த நோய் பரவியது.            அச்சுரங்கத்தின்
தொழிலாளர்கள் பெரும்பாலும் நீக்ரோக்கள்.    அவர்கள் சுத்தமாக
இருப்பதற்குப் பொறுப்பு    ஏற்க வேண்டியவர்கள், அவர்களுடைய
வெள்ளைக்கார எஜமானர்களே. அங்கே   இச் சுரங்க சம்பந்தமான
வேலையில் சில இந்தியர்களும் இருந்தனர். இவர்களில்   இருபத்து
மூன்று பேருக்கு இந் நோய் கண்டது.           ஒரு நாள் மாலை
இந்நோயினால் கடுமையாகப்      பீடிக்கப்பட்ட இவர்கள், இந்தியர்
குடியிருப்புப் பகுதியிலிருந்த     தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.
‘இந்தியன் ஒப்பீனியனு’க்கு அப்பொழுது           சந்தாசேர்த்துக்
கொண்டிருந்த ‘ஸ்ரீ மதன்ஜித்’ அப்பொழுது        அப் பகுதிக்குப்
போயிருந்தார். அவர் அச்சம் என்பதை   ஒரு சிறிதும் அறியாதவர்.
கொள்ளை நோய்க்குப் பலியான        இத் துர்ப்பாக்கியர்களைப்
பார்த்ததும் அவர் உள்ளம் பதறியது.       பென்ஸிலினால் எழுதி
எனக்குப் பின்வருமாறு ஒரு குறிப்பு     அனுப்பினார்: “திடீரென்று
கறுப்புப் பிளேக் நோய் கண்டிருக்கிறது.    தாங்கள் உடனே வந்து
அவசரமாக நடவடிக்கை            எடுத்துக்கொள்ள வேண்டும்.
இல்லாதுபோனால் மகா மோசமான விளைவுகளுக்கு நாம்  தயாராக
வேண்டியிருக்கும். தயவுசெய்து உடனே வாருங்கள்.”

     காலியாக இருந்த          ஒரு வீட்டின் பூட்டை உடைத்து
‘ஸ்ரீ மதன்ஜித்’ தைரியமாகத்                திறந்தார். நோயால்
பீடிக்கப்பட்டிருந்தவர்களையெல்லாம்      அவ் வீட்டில் கொண்டு
போய்ச் சேர்த்தார். அப்பகுதிக்கு       நான் உடனே சைக்கிளில்
போனேன். எந்தச் சந்தர்ப்பத்தை      முன்னிட்டு அந்த வீட்டை
எடுத்துக் கொள்ளநேரிட்டது        என்பதைக் குறித்து நகரசபை
நிர்வாகிக்கு உடனே எழுதினேன்.

     இச் செய்தியை அறிந்ததும் ஜோகன்னஸ்பர்க்கில் வைத்தியத்
தொழில் செய்துவந்த      டாக்டர் வில்லியம் காட்பிரே உதவிக்கு