பக்கம் எண் :

மேலும் உணவுப் பரிசோதனகள்385

Untitled Document
தோன்றவில்லை. தானிய ஆகாரத்தைப் போலவே பழ ஆகாரத்திலும்
நாவின் சுவை இன்பத்திற்கு இடமுண்டு   என்பதைக் கண்டேன். பழ
ஆகாரத்தில்     பழக்கப்பட்டுவிட்டால் அதில் ருசி இன்பம் இன்னும்
அதிகமாகிவிடவும் கூடும். ஆகையால்,    பட்டினி இருப்பது அல்லது
விடுமுறை நாட்களில்      ஒரே வேளைச்  சாப்பாட்டுடன் இருப்பது
என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தேன். பிராயச்சித்தம் செய்து
கொள்ளுவது போன்ற சந்தர்ப்பம் வந்தால்,       அதையும் பட்டினி
கிடப்பதற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

     உபவாசத்தினால் உடலிலிருந்து   கழிவுப் பொருள்கள் நன்றாக
வெளியேறிவிடுவதால் சாப்பாடு அதிக  ருசியாக இருந்தது; நன்றாகப்
பசி எடுத்தது. பட்டினியைப் புலன்     அடக்கத்துக்கு மட்டுமின்றிப்
புலன் நுகர்ச்சிக்கும்    சக்தி வாய்ந்த சாதனமாகப் பயன்படுத்தலாம்
என்பது அப்பொழுது எனக்குத் தெரிந்தது.      நான் கண்ட இந்த
திடுக்கிடும் உண்மைக்கு, பின்னால் எனக்கு ஏற்பட்ட  இதே போன்ற
அனுபவங்களையும்,            மற்றவர்களின் அனுபவங்களையும்
சான்றுகளாகக் காட்டலாம். என்      உடல் நிலையை அபிவிருத்தி
செய்யவும், அதற்கு பயிற்சி அளிக்கவும்    விரும்பினேன். ஆனால்,
இப்பொழுது எனது முக்கியமான நோக்கம்,     கட்டுத்திட்டங்களும்
சுவையடக்கமுமே. ஆகையால், முதலில்  ஓர் ஆகாரத்தையும், பிறகு
மற்றோர் ஆகாரத்தையும்     தேர்ந்தெடுத்துச் சோதித்தேன். அதே
சமயத்தில் அளவையும்      குறைத்தேன். ஆனால் சுவை இன்பம்
மாத்திரம் எனக்கு         முன்பு இருந்ததைப் போன்றே இருந்தது.
ஒன்றைவிட்டு மற்றொன்றைச் சாப்பிட ஆரம்பித்த போது, முன்னால்
சாப்பிட்டதைவிடப்       பின்னால் சாப்பிட்டது புதிதாகவும், அதிக
ருசியுள்ளதாகவும் எனக்குத் தோன்றிற்று.

     இச்சோதனைகளைச் செய்வதில் எனக்குப்   பல தோழர்களும்
இருந்தனர். இவர்களில் முக்கியமானவர்   ஹெர்மான் கால்லென்பாக்.
இந்த நண்பரைக் குறித்துத்        தென்னாப்பிரிக்கச் சக்தியாக்கிரக
சரித்திரத்தில் முன்பே  எழுதியிருக்கிறேன். ஆகையால், அதைப்பற்றி
நான் இங்கே திரும்பச்    சொல்லப் போவதில்லை. பட்டினியானாலும்
சரி, உணவு மாற்றமானாலும் சரி,       கால்லென்பாக் எப்பொழுதும்
என்னுடன் இருப்பார். சத்தியாக்கிரகப் போராட்டம்    உச்சநிலையில்
இருந்தபோது, அவருடைய இடத்தில் நான்       அவருடன் வசித்து
வந்தேன். எங்கள் உணவு மாறுதல்களைக்    குறித்து விவாதிப்போம்.
பழைய சாப்பாட்டைவிடப் புதிய     சாப்பாட்டில் அதிக இன்பத்தை
அனுபவிப்போம். இப்படிப்பட்ட பேச்சுக்கள்    அந்த நாளில் அதிக
இன்பமானவைகளாக    இருந்தன.     அவை தகாத பேச்சுக்களாக
எனக்குத் தோன்றவே இல்லை.       ஆனால், உணவின் சுவையில்