பக்கம் எண் :

குடும்ப சத்தியாக்கிரகம் 393

Untitled Document
பருப்பையும் சாப்பிடுவதில்லை    என்று உறுதி கூறுகிறேன். கடவுள்
ஆணை; உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.    இந்த விரதத்தை
மட்டும் நீங்கள் விட்டுவிடுங்கள்.        இப்படி நீங்கள் என்னைத்
தண்டிக்கக் கூடாது.”

     “உப்பையும் பருப்பையும்     சாப்பிடாமல் இருப்பது உனக்கு
மிகவும் நல்லது. அவைகள் இல்லாமல்    நீ நன்றாகவே இருப்பாய்
என்பதில் எனக்குக் கொஞ்சமும்       சந்தேகமில்லை. என்னைப்
பொறுத்தவரையில்,      நான் நிச்சயமாக எடுத்துக் கொண்டுவிட்ட
விரதத்தைக் கைவிட முடியாது. இது எனக்கும் நன்மையே செய்வது
நிச்சயம். ஏனெனில், ஒரு கட்டுத்திட்டம்,   அது எக்காரணத்தினால்
ஏற்பட்டதாயினும்,              மனிதருக்கு நல்லதே. ஆகையால்,
என்னைப்பற்றிக் கவலைப்படாதே. இது    எனக்கு ஒரு சோதனை.
அதோடு நமது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு  இது உனக்கு ஓர்
தார்மிக ஆதரவாகவும் இருக்கும்” என்றேன்.

     எனவே, என்னை மாற்றுவதற்கில்லை என்று விட்டு விட்டாள்.
“நீங்கள் மிகுந்த பிடிவாதக்காரர்.       யார் சொன்னாலும் கேட்க
மாட்டீர்கள்” என்று கூறிக் கண்ணீர் வடித்து ஆறுதல் அடைந்தாள்.

     இந்தச் சம்பவத்தைச்             சத்தியாக்கிரகத்திற்கு ஓர்
உதாரணமாகவே கொள்ள விரும்புவேன்.என்னுடைய வாழ்க்கையின்
இனிமையான நினைவுகளில் இதுவும் ஒன்று.

     இதற்குப் பிறகு கஸ்தூரிபாயின் தேக நிலை வெகு வேகமாகக்
குணமடைந்து வந்தது. இவ்விதம் குணம் ஏற்பட்டது, உப்பும், பருப்பு
வகையும் இல்லாத      சாப்பாட்டினாலா? அல்லது அதன் பலனாக
அவளுடைய ஆகாரத்தில்       ஏற்பட்ட மற்ற மாறுதல்களினாலா?
வாழ்க்கை சம்பந்தமான       மற்ற விதிகளில் சரியாக நடக்கும்படி
செய்வதில் நான் கவனமாக    இருந்ததன் காரணமாகவா? அல்லது
அந்தச் சம்பவத்தினால்      உள்ளத்தில் உண்டான ஆனந்தத்தின்
பலனாலா? அப்படித்தான்        என்றால் எந்த அளவுக்கு? இதை
என்னால்       சொல்லிவிட முடியாது. ஆனால், அவள் துரிதமாய்
குணமடைந்து வந்தாள்.    ரத்த நஷ்டம் அடியோடு நின்றுவிட்டது.
அரைகுறை வைத்தியன் என்று          எனக்கு இருந்த மதிப்பும்
அதிகமாயிற்று.

     என்னைப் பொறுத்த வரையில்,      உப்பையும் பருப்பையும்
தவிர்த்துக்கொண்டதால்    நன்மையே அடைந்தேன். விட்டு விட்ட
பொருள்களைத் தின்னவேண்டும் என்ற        ஆசையும் எனக்கு
வரவில்லை. ஒரு வருடமும்    விரைவில் கடந்துவிட்டது. முன்னால்
இருந்ததைவிட என்       புலன்கள் கட்டுக்கு அடங்கியவைகளாக
இருந்ததைக் கண்டேன்.    இந்தப் பரீட்சை புலனடக்க ஆர்வத்தை
அதிகரித்தது. நான் இந்தியாவுக்குத் திரும்பி வெகுகாலம் வரையிலும்
உப்பையும் பருப்பு வகைகளையும்        தின்னாமலேயே இருந்து