பக்கம் எண் :

ஆன்மப் பயிற்சி407

Untitled Document
இவையெல்லாம் எனக்குத்  திருப்தியளிக்கவில்லை. குழந்தைகளுடன்
நான் நெருங்கிப் பழக ஆரம்பிக்கவே,            நூல்களின் மூலம்
அவர்களுக்கு         ஆன்மப் பயிற்சியை  அளித்துவிட முடியாது
என்பதைக் கண்டேன். எவ்விதம்      தேகாப்பியாசங்களின் மூலமே
உடற்பயிற்சியும், அறிவு          அப்பியாசங்களினாலேயே அறிவுப்
பயிற்சியும்                அளிக்க முடியுமோ அவ்வாறே ஆன்ம
சாதனங்களினாலேயே ஆன்மப் பயிற்சியை அளிக்க முடியும். ஆன்ம
சாதனப் பயிற்சியோ,            முழுக்க முழுக்க உபாத்தியாயரின்
வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் பொறுத்தது.     ஓர் உபாத்தியார்
குழந்தைகளின் நடுவில் இருக்கும் போதும் சரி,   தனியாக இருக்கும்
போதும் சரி, தம்முடைய குணத்திலும்     செயலிலும் எப்பொழுதும்
அதிகக்கவனத்துடன் இருக்கவேண்டும்.

     ஓர் உபாத்தியாயர், மாணவர்களுக்குப்          பல மைல்கள்
தொலைவில் இருக்கும்போதும் தமது வாழ்க்கை முறையைக் கொண்டு
அம்மாணவர்களின் ஆன்மப்          பயிற்சிக்கு உதவவோ, தீமை
செய்யவோ முடியும்.  நான் பொய்யனாக இருந்து கொண்டு, உண்மை
பேசும்படி மாணவர்களுக்குப்     போதிப்பது என்பது வீண் வேலை.
தாம் கோழையாக   இருக்கும் ஓர் உபாத்தியாயர், தம்மிடம் படிக்கும்
மாணவர்களை வீரர்களாக்கிவிடவே முடியாது. புலனடக்கம் என்பதே
தெரியாத ஓர் ஆசிரியர்,        புலனடக்கத்தை மாணவர்களுக்குப்
போதித்து விடவும் முடியாது. ஆகையால்,      என்னுடன் இருக்கும்
பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும்    நானே எப்பொழுதும் உதாரண
பாடமாக இருக்கவேண்டும்        என்பதைக் கண்டேன். இவ்விதம்
அவர்கள் என் உபாத்தியாயர்களாயினர்.     அவர்களுக்காகவேனும்
நான் நல்லவனாக இருந்து நேர்மையுடன் வாழ வேண்டும்  என்பதை
நான் கற்றுக்கொண்டேன். டால்ஸ்டாய் பண்ணையில்    இருந்தபோது
எனக்கு நானே அதிகமாக விதித்துக் கொண்ட   கட்டுத்திட்டங்களும்
புலனடக்கங்களும்,           பெரும்பாலும் என் பாதுகாப்பிலிருந்த
குழந்தைகளுக்காகவே என்றும் சொல்லலாம்.

     அங்கே இருந்த             பையன்களில் ஒருவன் முரடன்;
அடங்காப்பிடாரி. அவன் பொய் சொல்லுவான்;  யாருடனும் சண்டை
போடுவான். ஒரு நாள் அவன் துஷ்டத்தனம்         எல்லை மீறிப்
போய்விட்டது. எனக்கு ஒரே கவலையாகிவிட்டது. சிறுவர்களை நான்
தண்டித்ததே இல்லை.      ஆனால், அச்சமயமோ எனக்கு அதிகக்
கோபம் வந்துவிட்டது. அவனுக்குப்        புத்திமதி கூறித் திருத்தப்
பார்த்தேன். அவனோ,       பிடிவாதமாக இருந்ததோடு என்னையும்
எதிர்த்து             மிதமிஞ்சிப் போகப் பார்த்தான். கடைசியாகப்
பக்கத்திலிருந்த ரூல் தடியை எடுத்து      அவன் கையில் ஓர் அடி
கொடுத்தேன். அவனை அடித்தபோதே        என் உடம்பெல்லாம்
நடுங்கியது. இதை அவனும் பார்த்திருக்கவே