பக்கம் எண் :

418சத்திய சோதனை

Untitled Document
வந்தார்கள்.  அப்படி வந்தவர்களில்      எல்லா மாகாணத்தினரும்,
மதத்தினரும் இருந்தனர்.

     இந்த விவரங்களை எல்லாம்           எடுத்துக் கூறி லார்டு
கிரிவேக்குக் கடிதம் எழுதினேன்.             எங்கள் சேவையை
ஏற்றுக்கொள்ளும் முன்பு நாங்கள் வைத்தியப் படை   வேலைகளில்
பயிற்சிபெறுவது அவசியம் என்றால்       அப்பயிற்சியைப் பெறவும்
தயாராக இருக்கிறோம் என்று       அதில் அறிவித்தேன். கொஞ்சம்
தயக்கத்திற்குப்           பிறகு லார்டு கிரிவே எங்கள் சேவையை
ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தார். நெருக்கடியான      அந்த நேரத்தில்
சாம்ராஜ்யத்திற்கு எங்கள் சேவையை அளித்ததற்காக      நன்றியும்
தெரிவித்தார்.

     காயம்பட்டவர்களுக்கு       முதல் வைத்திய உதவி செய்யும்
பயிற்சியைப் பிரபலமான          டாக்டர் காண்ட்லீயின் ஆதரவில்
தொண்டர்கள் பெற்றனர். ஆறு வாரக்     குறுகிய காலப் பயிற்சியே
அது. ஆனால், முதல் உதவி சம்பந்தமான எல்லாமே  அதில் கற்றுக்
கொடுக்கப்பட்டது.

     எங்கள் வகுப்பில் நாங்கள்        எண்பது பேர் இருந்தோம்.
ஆறுவாரங்களில் எங்களுக்குப்       பரீட்சை நடந்து ஒருவர் தவிர
மற்றெல்லோரும் தேறிவிட்டோம்.    அவர்களுக்கு ராணுவக் கவாத்து
முதலிய பயிற்சிகளுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்தது.  இந்த வேலை
கர்னல் பேக்கரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

     அந்த நாட்களில் பார்ப்பதற்கு லண்டன்   அற்புதக் காட்சியாக
இருந்தது. மக்களிடையே பீதியே இல்லை. ஆனால்,  தங்களாலியன்ற
உதவியைச் செய்யவேண்டும்    என்பதில் எல்லோரும் சுறுசுறுப்பாக
இருந்தனர். வயது வந்த        திடமான ஆண்களெல்லாம், போரில்
சிப்பாய்களாகப்           பயிற்சி பெறப் போய்விட்டனர். ஆனால்,
வயோதிகர்களும், பலவீனர்களும்,     பெண்களும் என்ன செய்வது?
அவர்கள் செய்ய விரும்பினால்         அவர்களுக்கும் போதுமான
வேலைகள் இருந்தன. துணிகளை வெட்டி    ஆடைகள் தயாரிப்பது,
காயமடைந்தவர்களுக்குக்    கட்டுக் கட்டுவது போன்ற வேலைகளில்
அவர்கள் ஈடுபட்டார்கள்.

     லைஸியம் என்ற பெண்களின் சங்கம்,   தங்களால் எவ்வளவு
முடியுமோ அவ்வளவு ஆடைகளைச்    சிப்பாய்களுக்குத் தைத்துக்
கொடுப்பது என்ற வேலையை  ஏற்றுக்கொண்டது. இந்தச் சங்கத்தில்
ஸ்ரீமதி சரோஜினி நாயுடு ஓர் உறுப்பினர். இவர்    அவ்வேலையில்
முழு மனத்துடன் ஈடுபட்டிருந்தார்.    முதன் முதலாக அப்பொழுது
தான் அவருடன் எனக்குப்      பழக்கம் ஏற்பட்டது. தைப்பதற்காக
வெட்டப்பட்டிருந்த ஒரு        துணிக் குவியலை அவர் என்னிடம்
கொடுத்து அவைகளை எல்லாம் தைத்துக் கொண்டு வந்து தம்மிடம்
கொடுக்கும்படி சொன்னார்.           அவருடைய கோரிக்கையை