பக்கம் எண் :

428சத்திய சோதனை

Untitled Document
வேண்டியிருந்தது.

     இரவெல்லாம் இந்த விஷயத்தைக்      குறித்தே சிந்தித்தேன்.
உணவுச் சோதனையைக் கைவிடுவது       என்றால் அத்துறையில்
எனக்குள்ள கருத்துக்களையெல்லாம்        கைவிடவேண்டி வரும்.
ஆனால், அந்தச் சோதனைகளில் எந்தக்   குறைபாடுகளையும் நான்
காணவில்லை. இப்பொழுது        பிரச்னையெல்லாம், கோகலேயின்
அன்பான  வற்புறுத்தல்களுக்கு எந்த அளவுக்கு நான் உடன்படுவது;
என் தேக நிலையின்          நன்மையை முன்னிட்டு என்னுடைய
சோதனைகளை எந்த அளவுக்கு மாற்றிக் கொள்ளுவது    என்பதே.
கடைசியாக இதில்           ஒரு முடிவுக்கு வந்தேன். முக்கியமாக
ஆன்மிகத்தையே நோக்கமாகக் கொண்டு       நான் கைக்கொண்ட
உணவுச் சோதனைகளை மட்டும்  பின்பற்றி வருவது; வேறு நோக்கம்
கொண்டதான              உணவுச் சோதனைகளை வைத்தியரின்
ஆலோசனையின்படி        விட்டு விடுவது என்பதே நான் செய்து
கொண்ட முடிவு. பால்    சாப்பிடுவதை விட்டதற்கு மிக முக்கியமான
நோக்கம் ஆன்மிகமானதேயாகும்.          பசுக்கள், எருமைகளின்
மடிகளிலிருந்து கடைசிச்             சொட்டு வரையிலும் பாலைக்
கறந்துவிடுவதற்குக் கல்கத்தாவில்      மாட்டுக்காரர்கள் அனுசரித்த
கொடிய முறைகள் என் மனக் கண்முன் காட்சியளித்தன.   மாமிசம்
எவ்விதம் மனிதனின் உணவல்லவோ,     அதேபோல மிருகங்களின்
பாலும் மனிதனின்          உணவாக இருப்பதற்கில்லை என்ற ஓர்
எண்ணமும் எனக்கு             இருந்துவந்தது. ஆகையால், பால்
சாப்பிடுவதில்லை என்ற என்            தீர்மானத்தில் உறுதியுடன்
இருந்துவருவது என்ற முடிவுடனேயே காலையில்  படுக்கையிலிருந்து
எழுந்தேன். இது என் மனத்திற்கும் அதிக     ஆறுதலாக இருந்தது.
கோகலேயிடம் போவதற்கே எனக்குப்    பயமாக இருந்தது. ஆனால்,
என் தீர்மானத்தை அவர் மதிப்பார் என்று நம்பினேன்.

     மாலையில் கால்லென்பாக்கும்        நானும் நாஷனல் லிபரல்
கிளப்புக்குப் போய்க் கோகலேயைப் பார்த்தோம்.      அவர் கேட்ட
முதல் கேள்வி, “டாக்டரின்     ஆலோசனையை ஏற்றுக் கொள்வது
என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டீர்களா?” என்பதே.

     மரியாதையோடு, ஆனால் உறுதியோடு,     நான் கூறியதாவது:
“ஒன்றைத் தவிர மற்றவைகளிலெல்லாம் இணங்கிவிட நான்  தயாராக
இருக்கிறேன். அந்த ஒன்றைப்பற்றி    மாத்திரம் என்னை வற்புறுத்த
வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். பாலையும்,  பாலிலிருந்து
தயாரானவைகளையும்,              மாமிசத்தையும் மாத்திரம் நான்
சாப்பிடமாட்டேன்.        இவைகளைச் சாப்பிடாததனால் நான் சாக
நேருமாயின், அதற்கும் தயாராவது நல்லதே    என்று கருதுகிறேன்.”