பக்கம் எண் :

வக்கீல் தொழில் பற்றிய நினைவுகள்435

Untitled Document
சொந்தப் பணத்தையும் செலவு செய்தது உண்டு.     இதை முன்பே
சொல்லிவிட்டதன் மூலம், என்       வக்கீல் தொழிலைக் குறித்துச்
சொல்லுவதற்கு      அவசியமானவைகளையெல்லாம் நான் சொல்லி
விட்டதாகவே எண்ணினேன்.        இன்னும் அதிகமாகச் சொல்ல
வேண்டும் என்று நண்பர்கள் விரும்புகின்றனர். வக்கீல்   தொழிலில்
சத்தியத்தினின்றும் தவறிவிட மறுத்து        நான் உறுதியுடனிருந்த
சந்தர்ப்பங்களில்        சிலவற்றைக் குறித்துச் சிறிதளவேனும் நான்
விவரித்துச்       சொன்னால் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருப்போர்
அதனால் பயனடையக் கூடும் என்று            அந்த நண்பர்கள்
நினைக்கிறார்கள் என்று தெரிகிறது.

     வக்கீல் தொழில்            பொய்யர்களின் தொழில் என்று
சொல்லப்பட்டதை நான் மாணவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன்.
பொய்சொல்லிப் பணத்தையோ,       அந்தஸ்தையோ சம்பாதித்துக்
கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கம் எனக்கு    இல்லாததனால்,
அதெல்லாம் என் மனத்தை மாற்றி விடவே இல்லை.

     தென்னாப்பிரிக்காவில் என் கொள்கைகள்   பன்முறைகளிலும்
சோதனைக்கு உள்ளானது உண்டு. என்     எதிர்க் கட்சிக்காரர்கள்,
சாட்சிகளுக்குச்     சொல்லிக்கொடுத்துத் தயார் செய்திருக்கிறார்கள்
என்பதைப் பல தடவைகளிலும் நான்       அறிந்திருக்கிறேன். என்
கட்சிக்காரரையோ, அவருடைய சாட்சிகளையோ     பொய் சொல்ல
மாத்திரம் நான் உற்சாகப் படுத்தியிருந்தால்,           நாங்கள் சில
வழக்குகளில் வெற்றி பெற்று இருப்போம்.      ஆனால், அத்தகைய
ஆசையை நான்     எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். ஒரு
வழக்கில் வெற்றி பெற்றுவிட்ட பிறகு     என் கட்சிக்காரர் என்னை
ஏமாற்றி விட்டார் என்று நான் சந்தேகித்த       ஒரே ஒரு சம்பவம்
எனக்கு ஞாபகம் இருக்கிறது.         என் கட்சிக்காரரின் வழக்கில்
நியாயமிருந்தால்தான் அதில் வெற்றி     கிடைக்க வேண்டும் என்று
என் உள்ளத்திற்குள் எப்பொழுதும் விரும்பி வந்தேன்.   வழக்குக்கு
என் கட்டணத்தை நிர்ணயிப்பதில்கூட,      அதில் வெற்றிபெற்றால்
இவ்வளவு கொடுக்க வேண்டும்            என்று நான் நிபந்தனை
போட்டதாகவும் எனக்கு நினைவில்லை.        கட்சிக்காரர் வெற்றி
பெற்றாலும் தோற்றாலும்,        என் கட்டணத்திற்கு அதிகமாகவோ,
குறைவாகவோ எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை.

     பொய் வழக்கை நடத்துவோன் என்றோ,      சாட்சிகளுக்குச்
சொல்லிக்கொடுத்துத்      தயார் செய்வோன் என்றோ   என்னிடம்
எதிர்பார்க்க வேண்டாம் என்று      புதிதாக வரும் கட்சிக்காரரிடம்
ஆரம்பத்திலேயே கூறிவிடுவேன். இதன் பலனாக,      எனக்கு ஒரு
பெயர் ஏற்பட்டு என்னிடம்          பொய் வழக்கே வருவதில்லை.
என்னுடைய         கட்சிக்காரர்களில் சிலர், பொய்க் கலப்பில்லாத
வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டு வந்து,   சந்தேகத்திற்கு