பக்கம் எண் :

440சத்திய சோதனை

Untitled Document
அட்டர்னியாகவும் அங்கே          தொழில் நடத்தலாம். ஆனால்,
டிரான்ஸ்வாலிலோ பம்பாயில் இருப்பதைப்போல, அட்டர்னிகளுக்கும்
அட்வகேட்டுகளுக்கும் உள்ள பொறுப்புக்கள் வெவ்வேறானவை. ஒரு
பாரிஸ்டர், தம் இஷ்டப்படி அட்டர்னியாகவோ,  அட்வகேட்டாகவோ
தொழிலை நடத்தலாம். ஆகவே, நேட்டாலில் நான்  அட்வகேட்டாக
ஏற்றுக்கொள்ளப் பட்டேன். ஆனால், டிரான்ஸ்வாலில் அட்டர்னியாக
இருக்க அனுமதிக்குமாறு கோரினேன். ஏனெனில், அட்வகேட்  என்ற
முறையில்               நான் இந்தியருடன் நேரடியான தொடர்பு
வைத்துக்கொள்ளுவதற்கில்லை.       தென்னாப்பிரிக்காவிலிருக்கும்
வெள்ளைக்கார அட்டர்னிகள் என்னை வக்கீலாக       அமர்த்திக்
கொண்டிருக்கமாட்டார்கள்.

     ஆனால், டிரான்ஸ்வாலில்கூட                அட்டர்னிகள்,
மாஜிஸ்டிரேட்டுகளுக்கு முன்னால்    ஆஜராகி விவாதிக்கலாம். ஒரு
சமயம் ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு மாஜிஸ்டிரேட்டின் முன்னால் நான்
ஒரு வழக்கை நடத்திக்கொண்டிருக்கையில்,       என் கட்சிக்காரர்
என்னை ஏமாற்றி விட்டார் என்பதைக் கண்டுகொண்டேன்.  சாட்சிக்
கூண்டில் ஏற்றி விசாரித்தபோது        அவர் திக்குமுக்காடியதைப்
பார்த்தேன். ஆகவே, அந்த வழக்கின்மீது     நான் விவாதிக்காமல்
அவ்வழக்கைத் தள்ளி       விடுமாறு மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக்
கொண்டேன்.               இதைப் பார்த்து எதிர்த்தரப்பு வக்கீல்
ஆச்சரியப்பட்டுப் போனார்.      மாஜிஸ்டிரேட் திருப்தியடைந்தார்.
என்னிடம் பொய்           வழக்கைக் கொண்டு வந்ததற்காக என்
கட்சிகாரரைக் கண்டித்தேன். பொய் வழக்குகளை    நான் எடுத்துக்
கொள்ளுவதே இல்லை என்பது அவருக்குத்        தெரியும். இதை
அவருக்கு நான் எடுத்துச் சொன்னபோது      அவர் தமது தவறை
ஒப்புக்கொண்டார். தனக்கு விரோதமாகத்    தீர்ப்புக் கூறி விடும்படி
நான்    மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக்கொண்டதைக் குறித்தும் அவர்
என்மீது கோபம் அடையவில்லை என்பது   எனக்கு ஞாபகம். அது
எப்படியாயினும் இந்த வழக்கில் நான் நடந்து கொண்ட விதத்தினால்
என் தொழிலுக்கு எந்தவிதமான     பாதகமும் ஏற்பட்டுவிடவில்லை.
உண்மையில் இதனால்             என் வேலை மிக எளிதாயிற்று.
உண்மையினிடம்  நான் கொண்டிருந்த பற்று மற்ற வக்கீல்களிடையே
என் மதிப்பை அதிகப்படுத்தியது என்பதையும் கண்டேன்.  நிறத்தின்
காரணமாக எனக்கு இடையூறுகள்           இருந்தபோதிலும், சில
சந்தர்ப்பங்களில் அவர்களுடைய    அன்பைப் பெறுவதும் எனக்குச்
சாத்தியமாயிற்று.

     வக்கீல் தொழில் சம்பந்தமான வேலையில் கட்சிகாரர்களிடமும்
சகாக்களிடமும் என் அறியாமையை   ஒளிக்கும் வழக்கமே எனக்கு
இல்லை. எனக்குத் தெரியாது    என்று நான் உணரும் போது வேறு