பக்கம் எண் :

புனாவில் கோகலேயுடன்449

Untitled Document
யான நாட்களைப் பற்றிய என் நினைவுகளை எல்லாம் இங்கே கூறி
விடுவது என்பது இயலாத காரியம். கோகலேயும்,  இந்திய ஊழியர்
சங்கத்தின் மற்ற     அங்கத்தினர்களும் என்னைத் தங்கள் அன்பு
வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டனர்.      என்னைச் சந்திப்பதற்காக
அவர்களையெல்லாம் கோகலே அங்கே        வரவழைத்திருந்தார்
என்றுதான் எனக்கு ஞாபகம். எல்லா      விஷயங்களைப் பற்றியும்
அவர்களுடன் நான் மனம் விட்டுத் தாராளமாக விவாதித்தேன்.

     அச்சங்கத்தில் நான்        சேர்ந்துவிட வேண்டும் என்பதில்
கோகலே ஆவலுடன் இருந்தார். எனக்கும் அந்த விருப்பம் இருந்தது.
ஆனால், என்னுடைய      கொள்கைகளுக்கும் வேலை முறைக்கும்
அவர்களுடையவைகளுக்கும்           அதிகப் பேதம் இருந்ததால்
அச்சங்கத்தில் நான் சேருவது சரியன்று என்று மற்ற அங்கத்தினர்கள்
கருதினர். கோகலேயோ,         என்னுடைய கொள்கைகளில் நான்
பிடிவாதமாக இருந்தபோதிலும்,    அவர்களுடைய கொள்கைகளைச்
சகித்துக்கொள்ளவும் என்னால் முடியும்     என்றும், நான் தயாராய்
இருக்கிறேன் என்றும் நம்பினார்.      அவர் கூறியதாவது: “சமரசம்
செய்துகொள்ளத் தயாராயிருக்கும் உங்கள்   குணத்தைச் சங்கத்தின்
அங்கத்தினர்கள் இன்னும்       சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை.
அவர்கள் தங்கள் கொள்கையில் பிடிவாதமுள்ளவர்கள்;  சுயேச்சைப்
போக்குள்ளவர்கள்! உங்களை    அவர்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள்
என்றே நம்புகிறேன். உங்களை   ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்,
அவர்களுக்கு உங்களிடம் மதிப்பும்   அன்பும் இல்லை என்று ஒரு
கணமேனும் நீங்கள்   எண்ணிவிடக்கூடாது. அவர்கள் உங்கள் மீது
அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள்.        அதற்கு எங்கே பங்கம்
ஏற்பட்டுவிடுமோ      என்ற        அச்சத்தினாலேயே உங்களை
ஏற்றுக் கொள்ள அவர்கள்              தயங்குகிறார்கள். நீங்கள்
அங்கத்தினராகச்          சேர்த்துக்கொள்ளப்பட்டாலும், சேர்த்துக்
கொள்ளப்படா விட்டாலும் உங்களை ஓர் அங்கத்தினர் என்றே நான்
பாவிக்கப்போகிறேன்.”

     என்னுடைய உத்தேசங்கள் யாவை என்பதைக் கோகலேயிடம்
கூறினேன். என்னை இந்திய ஊழியர் சங்கத்தில்  அங்கத்தினனாகச்
சேர்த்துக்கொண்டாலும்,   சேர்க்காது போயினும், ஓர் ஆசிரமத்தை
அமைத்து, அதில் என்           போனிக்ஸ் குடும்பத்துடன் வாழ
விரும்பினேன். குஜராத்தில் எங்காவது ஆசிரமத்தை   அமைப்பதே
உத்தேசம். நான் குஜராத்தியாகையால்,      குஜராத்துக்குச் சேவை
செய்து அதன் மூலம் நாட்டுக்குச்    சேவை செய்ய எண்ணினேன்.
இந்த என் உத்தேசம்         கோகலேக்குப் பிடித்திருந்தது. அவர்
கூறியதாவது: “நீங்கள் நிச்சயம்       அப்படியே செய்யவேண்டும்.
அங்கத்தினர்களுடன் நீங்கள் பேசியதன் பலன் எதுவாக