பக்கம் எண் :

474சத்திய சோதனை

Untitled Document
ஒருவர் கிடைக்கமாட்டார்          என்பது அவருடைய நம்பிக்கை.

     ஆசிரமத்தை அகமதாபாத்தில் ஆரம்பிப்பது என்று கடைசியாக
முடிவு செய்தேன்.

     ஆசிரமத்தை அமைப்பதற்கு இடத்தைப்   பொறுத்த வரையில்
எனக்கு முக்கியமாக உதவி செய்தவர் அகமதாபாத் பாரிஸ்டரான ஸ்ரீ
ஜூவன்லால் தேசாய்.     தமது கோச்ராப் பங்களாவை வாடகைக்கு
விட அவர்         முன் வந்தார்.        நாங்களும் வாடகைக்கு
அமர்த்திக்கொள்ளத் தீர்மானித்தோம்.

     ஆசிரமத்திற்கு என்ன பெயர் வைப்பது    என்பதை முதலில்
முடிவுசெய்ய வேண்டி இருந்தது.       ‘சேவாசிரமம்’, ‘தபோவனம்’
முதலிய பெயர்களை வைக்கலாம்     என்று கூறினர். ‘சேவாசிரமம்’
என்ற பெயர் எனக்குப்    பிடித்திருந்ததெனினும் சேவையின் முறை
இன்னதென்பதைப்பற்றிய விளக்கம் அதில் இல்லை.    ‘தபோவனம்’
என்பது மிகைப்படுத்திக்         கூறும் பெயர் என்று தோன்றியது.
ஏனெனில், தவம் எங்களுக்குப்       பிரியமானது தான் என்றாலும்
நாங்கள் தபஸ்விகள் என்று       எண்ணிக்கொண்டு விட முடியாது.
சத்தியத்தில் பற்றுடன் இருப்பதே எங்கள் கோட்பாடு.   சத்தியத்தை
நாடி, சத்தியத்தையே கட்டாயமாக அனுசரிப்பது    எங்கள் வேலை.
தென்னாப்பிரிக்காவில் நான்   கையாண்ட முறையை இந்தியாவுக்கும்
அறிமுகப்படுத்த நான் விரும்பினேன். அம் முறையை  அனுசரிப்பது
இந்தியாவில் எவ்வளவு தூரம்   சாத்தியம் என்பதைச் சோதிக்கவும்
ஆசைப்பட்டேன்.            ஆகையால் எங்கள் லட்சியத்தையும்,
எங்களுடைய சேவையின் முறையையும் காட்டுவதான ‘சத்தியாக்கிரக
ஆசிரமம்’ என்ற பெயரையே            நானும் என் சகாக்களும்
தேர்ந்தெடுத்தோம்.

     ஆசிரமத்தை நடத்துவதற்கு          விதிகளையும், ஒழுக்க
முறைகளையும் வகுக்க வேண்டியது அவசியமாயிற்று.  இதற்கு ஒரு
நகலைத் தயாரித்தோம்.                அதன் மீது நண்பர்களின்
அபிப்பிராயத்தையும் கேட்டறிந்தோம்.      எங்களுக்குக் கிடைத்த
அபிப்பிராயங்களில்      ஸர் குருதாஸ் பானர்ஜி அனுப்பியிருந்தது
இன்னும் என் நினைவில்    இருக்கிறது. நாங்கள் தயாரித்த விதிகள்
அவருக்குப் பிடித்திருந்தன. ஆனால்,        இளம் சந்ததியாரிடம்
வருந்தத்தக்க வகையில் அடக்கம் என்பது இல்லாமல்  இருப்பதால்
ஒழுக்க முறைகளில் அதையும்       ஒன்றாகச் சேர்த்துக்கொள்ள
வேண்டும் என்று அவர் யோசனை கூறியிருந்தார். இக்குறைபாட்டை
நானும் கவனித்து    வந்திருக்கிறேன். ஆயினும், அடக்கம் என்பது
விரதமாகக்கொள்ள வேண்டிய விஷயமாகிவிடும் என்று அஞ்சினேன்.
‘நான்’ என்ற அகந்தையைப் போக்கிக்கொண்டு       விடுவதுதான்,
அடக்கம் என்பதற்குரிய உண்மையான பொருள்.    ‘நான்’ என்பது
அற்றுப் போவதே மோட்சம். இது அதனளவில்