பக்கம் எண் :

அவுரிச் சாகுபடி அநீதி 485

Untitled Document
கால் சட்டை அணிந்து, கறுப்பு    மேல் சட்டையும் போட்டிருந்தார்.
அப்பொழுது பிரஜ்கிஷோர் பாபு   எனக்கு அவ்வளவாக ஒரு நல்ல
அபிப்பிராயத்தை உண்டாக்கவில்லை.           ஒன்றும் தெரியாத
விவசாயிகளை ஏமாற்றிப் பிழைக்கும்         ஒரு வக்கீலாக அவர்
இருக்கக்கூடும் என்றே நான் எண்ணினேன்.    சம்பாரணைப் பற்றி
அவர் வாய் மொழி மூலம் கேட்டறிந்ததும், என் வழக்கத்தை ஒட்டி,
“நிலைமையை நேரில் பார்ப்பதற்கு       முன்னால் நான் எந்தவித
அபிப்பிராயமும் கூறுவதற்கில்லை.       காங்கிரஸில் தயவு செய்து
நீங்களே தீர்மானத்தைக்      கொண்டு வாருங்கள். இப்போதைக்கு
என்னைச் சும்மா விட்டு விடுங்கள்” என்றேன். காங்கிரஸிடமிருந்தும்
கொஞ்சம் உதவியைப் பெற        ராஜ்குமார் சுக்லா விரும்பினார்.
சம்பாரண் மக்களிடம் அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றைப்
பாபு       பிரஜ்கிஷோர் பிரசாத் கொண்டு வந்தார். அத்தீர்மானம்
காங்கிரஸில் ஏகமனதாக நிறைவேறியது.

     ராஜ்குமார் சுக்லா       மகிழ்ச்சியடைந்தாரெனினும் திருப்தி
அடைந்துவிடவில்லை.         நானே நேரில் சம்பாரணுக்கு வந்து
விவசாயிகளின்          துயரங்களைப் பார்க்க வேண்டும் என்று
விரும்பினார். நான் செய்யவிருந்த          சுற்றுப் பிரயாணத்தில்
சம்பாரணையும் சேர்த்துக் கொள்ளுவதாகவும்,   இரண்டொரு நாள்
அங்கே இருப்பதாகவும் சொன்னேன்.       “ஒரு நாளே போதும்.
அங்கே நடப்பதையெல்லாம்       உங்கள் கண்ணாலேயே நீங்கள்
காணலாம்” என்றார், அவர்.

     லட்சுமணபுரியிலிருந்து கான்பூருக்குப் போனேன்.  ராஜ்குமார்
சுக்லா அங்கும் என்னுடன் வந்தார்.       “இங்கிருந்து சம்பாரண்
அருகிலேயே இருக்கிறது. அங்கே      வருவதற்கென்று ஒரு நாள்
ஒதுக்குங்கள்” என்று அவர் வற்புறுத்தினார். “தயவுசெய்து  இந்தத்
தடவை மன்னித்துவிடுங்கள். ஆனால்,     நான் பிறகு நிச்சயமாக
வருகிறேன்” என்று கூறி             மேற்கொண்டும் என்னைக்
கட்டுப்படுத்திக்கொண்டேன்.

     பிறகு ஆசிரமத்திற்குத் திரும்பினேன்.     விடாக்கண்டரான
ராஜ்குமார் அங்கேயும் வந்துவிட்டார்.    “நீங்கள் வரும் நாளைத்
தயவுசெய்து இப்பொழுதே  குறிப்பிட்டு விடுங்கள்” என்றார். “சரி,
இன்ன தேதியில் நான் கல்கத்தாவில் இருக்க  வேண்டியிருக்கிறது.
அப்பொழுது வந்து என்னைச் சந்தித்து, அங்கே     அழைத்துப்
போங்கள்” என்றேன். நான்    போக வேண்டியது எங்கே, செய்ய
வேண்டியது என்ன, பார்க்க     வேண்டியது எது என்பதெல்லாம்
எனக்குத் தெரியாது.

     கல்கத்தாவில் பூபேன் பாபுவின்     வீட்டிற்கு நான் போய்ச்
சேருவதற்கு முன்னாலேயே     ராஜ்குமார் சுக்லா அங்கே போய்
எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.  இவ்விதம் கள்ளங்கபடமற்ற,