பக்கம் எண் :

490சத்திய சோதனை

Untitled Document
வந்திருக்கிறேன். இத்தகைய வழக்குகளைக் கோர்ட்டுக்குக் கொண்டு
போவதால், எந்தவிதமான        நன்மையும் இல்லை. விவசாயிகள்
இவ்விதம்   நசுக்கப்பட்டுப் பயமடைந்திருக்கும் போது, கோர்ட்டுகள்
பயனற்றவை. அவர்களுக்கு  உண்மையான பரிகாரம், பயத்திலிருந்து
அவர்களை விடுவிப்பதே. ‘தீன் கதியா’ முறையைப்    பீகாரிலிருந்து
விரட்டியடித்துவிடும் வரையில் நாம்        சும்மா உட்கார்ந்திருக்க
முடியாது. இரண்டு நாட்களில் இங்கிருந்து    புறப்பட்டுவிட முடியும்
என்று எண்ணியிருந்தேன். ஆனால்,      இந்த வேலையை முடிக்க
இரண்டு ஆண்டுகளும் ஆகக்கூடும் என்பதை    இப்பொழுது நான்
அறிகிறேன். அவசியமானால், அவ்வளவு காலம்    இருக்கவும் நான்
தயாராயிருக்கிறேன். நான்        செய்ய வேண்டியிருக்கும் வேலை
இன்னதென்பதை      இப்பொழுது உணருகிறேன். ஆனால், உங்கள்
உதவி எனக்கு வேண்டும்.”

     பிரஜ்கிஷோர் பாபு,      இணையற்ற வகையில் நிதானத்துடன்
இருந்ததைக் கண்டேன். அவர் அமைதியோடு,

     “எங்களால் முடிந்த            உதவிகளையெல்லாம் நாங்கள்
செய்கிறோம். ஆனால், உங்களுக்கு     எந்தவிதமான உதவி தேவை
என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள்” என்றார்.

     இவ்வாறு நடுநிசி வரையில்      உட்கார்ந்து பேசினோம். நான்
அவர்களிடம் கூறியதாவது: “உங்களுடைய சட்ட ஞானத்தால் எனக்கு
ஒருவிதப் பிரயோசனமும் இல்லை.     எழுத்து வேலைக்கும், மொழி
பெயர்க்கும் வேலைக்குமே     எனக்கு உதவி தேவை; சிறை செல்ல
வேண்டிய அவசியமும் ஏற்படலாம்.    அந்த அபாயத்திற்கும் நீங்கள்
தயாராக இருக்க வேண்டும் என்றே    நான் விரும்புவேன். ஆனால்,
எவ்வளவு தூரம் போகமுடியும் என்று     நீங்கள் எண்ணுகிறீர்களோ
அந்த அளவுக்கு மாத்திரம் நீங்கள் போகலாம். நீங்கள் குமாஸ்தாக்கள்
ஆகிவிடுவதும், நிச்சயமற்ற காலம்    வரையில் தொழிலை விட்டுவிட
வருவதும்           சாமான்யமான விஷயமே அல்ல. இப் பகுதியில்
பேசப்படும் ஹிந்தியைப் புரிந்து கொள்வது      எனக்குக் கஷ்டமாக
இருக்கிறது. செய்தி அல்லது      உருது மொழிப் பத்திரிகைகளையும்
என்னால் படிக்க முடியாது. இவற்றை      மொழிபெயர்த்து எனக்குச்
சொல்ல உங்கள் உதவி வேண்டியிருக்கும்.        இந்த வேலைக்குச்
சம்பளம்  கொடுத்து ஆள் வைக்க நம்மால் ஆகாது. அன்பிற்காகவும்,
சேவை                உணர்ச்சியின் பேரிலுமே இவைகளெல்லாம்
செய்யப்படவேண்டும்.”

     பிரஜ்கிஷோர் பாபு நான் கூறியதை     உடனே நன்கு அறிந்து
கொண்டார். இப்பொழுது அவர் என்னையும்    தமது சகாக்களையும்
முறையாகக் கேள்விகள் கேட்டு குறுக்கு விசாரணை செய்தார். தங்கள்
சேவை எவ்வளவு காலத்திற்கு வேண்டியிருக்கும், தங்களில் எத்தனை
பேர் வேலைக்கு வேண்டும். தாங்கள் முறை போட்டுக்