பக்கம் எண் :

குழந்தைப் பருவம்5

Untitled Document
(Kettle) என்பது. அதை நான் தவறாக எழுதிவிட்டேன். உபாத்தியாயர்
தம் கால் பூட்ஸ் முனையால் என் காலைச் சீண்டித் தூண்டினார். நான்
புரிந்து கொள்ளவில்லை. நாங்கள்    பக்கத்துப் பையனைப் பார்த்துக்
‘காப்பி’ அடிக்காமல் பார்த்துக்      கொள்ளுவதற்காகவே  ஆசிரியர்
அங்கே இருக்கிறார் என்று நான்       எண்ணிக்  கொண்டிருந்தேன்.
ஆகையால், என் பக்கத்துப்        பையனின்  சிலேட்டைப் பார்த்து
அப்பதத்தின் எழுத்துக்களைக்       காப்பியடிக்க  அவர் என்னைத்
தூண்டுகிறார் என்பதை          நான்  அறியவில்லை. இதன் பலன்
என்னவெனில், என்னைத்       தவிர மற்ற  எல்லாப் பிள்ளைகளும்
அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான்  ஒருவனே முட்டாளாக
இருந்து விட்டேன். இந்த முட்டாள் தனத்தை     நான் உணரும் படி
செய்வதற்கு ஆசிரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும்
பயனில்லை. ‘காப்பி’          அடிக்கும் வித்தையை நான் என்றுமே
கற்றுக்கொள்ள முடியவில்லை.

     என்றாலும், என் ஆசிரியரிடம்   நான் கொண்டிருந்த மதிப்பை
இச்சம்பவம் கொஞ்சமும்     குறைத்துவிடவில்லை. பெரியவர்களிடம்
இருக்கும் குறைகளைக் காண்பதில்    குருடனாகவே இருந்துவிடுவது
எனது சுபாவம். இதே ஆசிரியரின்    வேறு பல குறைபாடுகளையும்
பின்னால் அறியலானேன். என்றாலும், அவரிடம்   நான் வைத்திருந்த
மதிப்பு மாத்திரம்    குறையவே இல்லை. ஏனெனில், பெரியவர்களின்
கட்டளைகளை   நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக்
கவனிக்காமல் இருந்துவிட நான் கற்றுக் கொண்டிருந்தேன்.

     அதே காலத்தில்   நடந்த மற்றும்      இரு சம்பவங்கள் என்
நினைவில் என்றும் அப்படியே     இருந்து வருகின்றன. என் பாடப்
புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில் எனக்குப் பொதுவாக
விருப்பம் இருந்ததில்லை. அன்றாடம்   பாடங்களைச் சரிவரப் படித்து
விட வேண்டும்; ஏனெனில், சரியாகப்   படிக்காததற்காக  ஆசிரியரின்
கண்டன   தண்டனைகளுக்கு    ஆளாவது    எனக்குப் பிடிக்காது
என்பதுடன் அவரை ஏமாற்றவும் நான்   விரும்பவில்லை. ஆகையால்,
பாடங்களைக்   கட்டாயம் படித்துவிடுவேன். ஆனால்,     அவற்றில்
அடிக்கடி என் புத்தி செல்லாது. இவ்வாறு   பாடங்களையே சரியாகப்
படிக்காமல் இருக்கும்போது      மேற்கொண்டு வேறு புத்தகங்களைப்
படிப்பது    என்பதற்கே  இடமில்லை. ஆனால்,     என் தந்தையார்
வாங்கியிருந்த  ‘சிரவணனின் பிதிர் பக்தி நாடகம்’  ( இது சிரவணன் பெற்றோரிடம்  கொண்டிருந்த பக்தியைப் பற்றிய நாடகம் )    என்ற
புத்தகம் என் கண்ணில் எப்படியோ பட்டது. தீவிரமான சிரத்தையுடன் அப்புத்தகத்தைப் படித்தேன். அந்தச் சமயத்தில் எங்கள்   ஊருக்குப்
படங்களைக்    காட்டுவோரும்    வந்திருந்தார்கள். நான்   பார்த்த
படங்களில் ஒன்று, கண்ணிழந்த தன்னுடைய தாய் தந்தையரைச்