பக்கம் எண் :

கவர்னர் நல்லவராகும்போது 509

Untitled Document
பட்டிருந்தாலும், அதன் பொருள் என்றும் தெளிவானதே.

     இதற்கு நான் பதில் எழுதினேன்.     விசாரணை நீண்ட காலம்
நடப்பதாகவே இருக்க முடியும் என்றும், மக்களுக்கு கஷ்ட நிவாரணம்
அளிப்பதில் அது முடிந்தாலன்றிப்      பீகாரை விட்டுப் போய்விடும்
நோக்கம் எனக்கு இல்லை என்றும் அதில் கூறினேன். விவசாயிகளின்
குறைகள் உண்மையானவை            என்பதை ஒப்புக் கொண்டு,
அவர்களுக்குக் கஷ்ட        நிவாரணம் கிடைக்கும்படி அரசாங்கம்
செய்யலாம். அல்லது சர்க்காரே       உடனே இதில் விசாரணையை
நடத்துவதற்கான அவசியத்தை விவசாயிகள்    நிரூபித்துவிட்டார்கள்
என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ளலாம்;     இவ்விதம் செய்வதன்
மூலம் என் விசாரணையை அரசாங்கம்    முடித்து விடலாம் என்றும்
அக்கடிதத்தில் குறிப்பிட்டேன்.

     லெப்டினெட் கவர்னர்    ஸர் எட்வர்டு கெயிட், தம்மை வந்து
பார்க்குமாறு எனக்கு எழுதினார்.     விசாரணைக்கு ஏற்பாடு செய்ய
விரும்புவதாக அவர் கூறியதோடு      விசாரணைக் கமிட்டியில் ஓர்
அங்கத்தினனாக இருக்கும்படியும் என்னை அழைத்தார்.  கமிட்டியின்
மற்ற அங்கத்தினர்கள் இன்னார் என்பதைக்      கேட்டுத் தெரிந்து
கொண்டேன். என் ஊழியர்களையும் கலந்து  ஆலோசித்தேன். பிறகு
ஒரு நிபந்தனையின் பேரில்     கமிட்டியில் இருக்கச் சம்மதித்தேன்.
அந்த விசாரணை         நடக்கும்போது என் சகாக்களைக் கலந்து
ஆலோசித்துக் கொள்ள         எனக்கு உரிமை இருக்க வேண்டும்;
கமிட்டியில் அங்கத்தினனாக நான் இருப்பதனால்,     விவசாயிகளின்
கட்சியை எடுத்துக் கூறி வாதிக்கும் உரிமையை     நான் இழந்தவன்
ஆகமாட்டேன் என்பதை அரசாங்கம்     ஒப்புக்கொள்ள வேண்டும்;
இந்த விசாரணையின்            பலன் எனக்குத் திருப்தியளிக்காது
போகுமானால், பிறகு விவசாயிகள் என்ன நடவடிக்கை     எடுத்துக்
கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு  ஆலோசனை
கூறவும், வழி காட்டவும்         எனக்கு உரிமை இருக்க வேண்டும்.
இவைகளே நான் கேட்ட நிபந்தனைகள். ஸர் எட்வர்டு கெயிட், இந்த
நிபந்தனைகள் நியாயமானவை,    சரியானவை என்று கூறி அவற்றை
ஏற்றுக் கொண்டார்.           விசாரணையைக் குறித்தும் அறிக்கை
வெளியிட்டார். காலஞ்சென்ற ஸர் பிராங்க் ஸ்லையை அக்கமிட்டியின்
தலைவராக நியமித்தார்.

     விவசாயிகளின் கட்சி      நியாயமானது என்று கமிட்டியினர்
கண்டனர். அவர்களிடமிருந்து தோட்ட முதலாளிகள்  பணம் பறித்து
வந்தது, சட்ட விரோதமானது என்று    கமிட்டி கண்டு, அதில் ஒரு
பகுதியைத் தோட்ட முகலாளிகள் திருப்பிக் கொடுத்து விடவேண்டும்
என்றும் கமிட்டி சிபாரிசு செய்தது. சட்டத்தின் மூலம்   ‘தீன் கதியா’
முறையை ரத்துச் செய்து விட வேண்டும் என்றும் கமிட்டி கூறியது.