பக்கம் எண் :

514சத்திய சோதனை

Untitled Document
ஏற்படக் கூடும் என்று கண்டேன்.      ஆசிரமத்திற்குள் சுத்தத்தின்
விதிகளை என்னதான் ஜாக்கிரதையாக    அனுசரித்தாலும், சுற்றிலும்
உள்ள சுகாதாரக் கேடான          நிலைமையினால், ஆசிரமத்தில்
இருப்பவர்கள் பாதிக்கப்படாமல்    இருந்துவிட முடியாது. கோச்ராப்
மக்கள் இந்தச் சுகாதார விதிகளை       அனுசரிக்கும்படி செய்யும்
நிலையிலோ, வேறு வகையில்      அவர்களுக்குச் சேவை செய்யும்
நிலையிலோ நாங்கள்            அப்பொழுது இல்லை. ஆசிரமம்,
பட்டணத்திற்கும் கிராமத்திற்கும்    கொஞ்சம் தூரத்திலேயே இருக்க
வேண்டும். என்றாலும், இந்த         இரண்டுக்கும் போக முடியாத
தொலை தூரத்திலும் இருக்கக் கூடாது என்பது எங்கள்   கொள்கை.
என்றாவது      ஒரு நாள், எங்களுக்குச் சொந்தமான நிலத்திலேயே
ஆசிரமத்தை அமைப்பது என்றும் தீர்மானித்திருந்தோம்.

     கோச்ராப்பை விட்டுப் போய்விட       வேண்டும் என்பதற்கு
அங்கே பரவிய பிளேக் நோயே போதுமான      முன்னெச்சரிக்கை
என்று எனக்குத் தோன்றிற்று. அகமதாபாத்        வர்த்தகரான ஸ்ரீ
பூஞ்சாபாய் ஹிராசந்துக்கு ஆசிரமத்துடன்      நெருங்கிய தொடர்பு
ஏற்பட்டது. புனிதமான, தன்னலமற்ற எண்ணத்தின் பேரில் அவர் பல
விஷயங்களிலும்  எங்களுக்குச் சேவை செய்து வந்தார். அகமதாபாத்
காரியங்களில் அவருக்கு     அதிக அனுபவம் உண்டு. எங்களுக்குத்
தகுந்த இடம்          தேடித் தருவதாக அவர் முன்வந்தார். இடம்
தேடிக்கொண்டு நானும்      அவருடன் கோச்ராப்புக்குத் தெற்கிலும்
வடக்கிலுமாகப் போனேன்.      மூன்று நான்கு மைல் வடக்கில் ஓர்
இடத்தைப் பார்க்குமாறு    அவருக்கு யோசனை சொன்னேன். பிறகு
அவர், இப்பொழுது ஆசிரமம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.
இந்த இடம், சபர்மதி மத்திய சிறைக்கு     அருகாமையில் இருந்தது,
எனக்கு           முக்கியமாகக் கவர்ச்சியளித்தது. சிறைப்படுவதே
சாதாரணமாகச் சத்தியாக்கிரகிகளின் கதி என்று     கருதப்பட்டதால்,
இந்த இடம் எனக்குப்   பிடித்திருந்தது. பொதுவாகச் சுற்றுப்புறங்கள்
சுத்தமாக இருக்கும்             இடங்களையே சிறைச்சாலைகளை
அமைப்பதற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன்.

     எட்டு நாட்களில் அந்த நிலத்திற்குக் கிரய சாசனம் பூர்த்தியாகி
விட்டது. அந்த நிலத்தில்    எந்தவிதக் கட்டிடமோ, மரமோ இல்லை.
நதிக்கரையில் இருக்கிறது,        ஏகாந்தமான இடத்தில் இருக்கிறது
என்பவை முக்கியமான சௌகரியங்கள்.        முதலில் கூடாரங்கள்
போட்டுக்கொண்டு அங்கே வசிக்க      ஆரம்பித்து விடுவது என்று
முடிவு செய்தோம். நிரந்தரமான         கட்டிடம் கட்டும் வரையில்
சமையலுக்கு ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கொள்ளுவது என்றும்
தீர்மானித்தோம். ஆசிரமம்      மெல்ல வளர்ந்துகொண்டு போயிற்று.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட     அப்பொழுது நாங்கள்
நாற்பது பேர். எல்லோருக்கும்