பக்கம் எண் :

‘வெங்காயத் திருடர்’ 525

Untitled Document
மகசூல்களையும் ஜப்தி செய்தார்கள்.  இவையெல்லாம் விவசாயிகளின்
உறுதியைக் குலைத்துவிட்டன.        சிலர் தங்கள் வரிப்பாக்கியைச்
செலுத்திவிட்டார்கள். மற்றும் சிலரோ, தங்கள் வரிப்பாக்கிக்காக ஜப்தி
செய்துகொண்டு போகட்டும் என்று,      பத்திரமான தங்கள் ஜங்கம
சொத்துகள் - அதிகாரிகள் கையில் அகப்படும் வகையில் வைத்துவிட
விரும்பினார்கள். ஆனால்,    இதற்கு மாறாக மற்றும் சிலரோ, கடைசி
வரையில் போராடியே தீருவது என்று      உறுதியுடன் இருந்தார்கள்.

     இப்படி எல்லாம்   நடந்துகொண்டிருந்த சமயம், ஸ்ரீ சங்கரலால்
பரீக்கின் சாகுபடியாளர்களில் ஒருவர்   தம்மிடமிருந்த நிலத்திற்குரிய
தீர்வையைச் செலுத்திவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமது சாகுபடியாளர்     செய்துவிட்ட தவறுக்கு ஸ்ரீ சங்கரலால் பரீக்
உடனே தக்க பரிகாரம் செய்துவிட்டார்.       எந்த நிலத்திற்கு வரி
செலுத்தப் பட்டுவிட்டதோ அந்த நிலத்தை     அவர் தருமத்திற்குக்
கொடுத்துவிட்டார். இவ்விதம்          அவர் தமது கௌரவத்தைக்
காத்துக்கொண்டதோடு மற்றவர்களுக்கும் சிறந்த     உதாரணமானார்.

     பயமடைந்துவிட்டவர்களின்    உள்ளத்தில் உறுதி ஏற்படும்படி
செய்வதற்காக, ஸ்ரீ மோகன்லால்   பாண்டியாவின் தலைமையிலிருந்த
மக்களுக்கு நான் ஒரு யோசனை  கூறினேன். ஒரு நிலத்தில் மகசூல்
நியாயமின்றி ஜப்தி            செய்யப்பட்டிருக்கிறது என்பது என்
அபிப்பிராயம். அந்த வயலிலிருந்த வெங்காய    மகசூலை அப்புறப்
படுத்திவிடும்படி கூறினேன். இதைச் சாத்வீகச்    சட்டமறுப்பு என்று
நான் கருதவில்லை. இது சாத்விகச்   சட்டமறுப்பாகவே இருந்தாலும்,
நிலத்தில் இருக்கும் மகசூலை            ஜப்தி செய்வது சட்டப்படி
சரியானதாகவே இருப்பினும்,       ஒழுக்க ரீதியில் அது தவறானது;
கொள்ளையைத் தவிர      வேறு எதுவும் அல்ல அது என்று நான்
கூறினேன்.         ஆகையால், ஜப்தி உத்தரவு இருந்தாலும், அந்த
நிலத்திலிருந்து வெங்காய மகசூலை அப்புறப்படுத்திவிட  வேண்டியது
மக்கள் கடமை என்றேன். அபராதம்       விதிக்கப்பட்டது அல்லது
தண்டனை அடைவது என்பது          இத்தகைய சட்ட மறுப்பின்
அவசியமான பின்விளைவாகும்.             ஆகையால், அபராதம்
விதிக்கப்படுவது அல்லது தண்டனையை அடைவது என்பதன் மூலம்
புதியதொரு பாடத்தைக்     கற்றுக்கொள்ளுவதற்கு மக்களுக்கு இது
சிறந்த வாய்ப்பு.           ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவுக்கோ இது
மனத்திற்குப்       பிடித்த காரியம். சத்தியாக்கிரகக் கொள்கைக்குப்
பொருத்தமான வகையில் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றைச் செய்து
சிறைவாச உருவில் துன்பத்தை      அனுபவிக்காமல் இப்போராட்டம்
முடிந்து விடுவதை             அவர் விரும்பவில்லை. ஆகையால்,
அந்நிலத்திலிருந்த வெங்காய மகசூலைத் தாமே