பக்கம் எண் :

546சத்திய சோதனை

Untitled Document
வேண்டியதாயிற்று. அப்பொழுது     சங்கர்லால் பாங்கர் என் உடல்
நிலையின் காவலராக இருந்து வந்ததால்,  டாக்டர் தலாலைக் கலந்து
ஆலோசிக்குமாறு   என்னை வற்புறுத்தினார். அதன் பேரில் டாக்டர்
தலாலை அழைத்து வந்தனர்.         உடனுக்குடனேயே முடிவுக்கு
வந்துவிடுவதில் அவருக்கு இருந்த ஆற்றல் என்னைக்    கவர்ந்தது.

     அவர் கூறியதாவது: “நீங்கள்   பால் சாப்பிட்டாலன்றி உங்கள்
உடம்பு தேறும்படி செய்வது என்னால் முடியாது.    அதோடு அயம்,
ஆர்ஸனிக் ஆகிய               மருந்துகளை ஊசிமூலம் குத்திக்
கொள்ளுவீர்களானால் உங்கள் உடம்பைத்   தேற்றி விடுவதாக நான்
முற்றும் உத்தரவாதம் அளிக்க முடியும்.”

     அதற்கு நான், “ஊசி குத்தி       மருந்தை நீங்கள் ஏற்றலாம்.
ஆனால், பால் சாப்பிடுவது          என்பது வேறு விஷயம். பால்
சாப்பிடுவதில்லை என்று      விரதம் பூண்டிருக்கிறேன்” என்றேன்.
அதன் பேரில் டாக்டர், “உங்கள் விரதத்தில்  தன்மைதான் என்ன?”
என்று கேட்டார்.

     பசுவையும் எருமையையும் பால் கறப்பதற்கு  பூக்கா முறையை
அனுசரிக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்ததிலிருந்து   நான் இந்த
விரதத்தை மேற்கொண்டதைப்பற்றிய வரலாற்றையும், அவ்விரதத்தின்
காரணத்தையும், அவருக்கு எடுத்துக் கூறினேன்.   “பால் என்றாலே
எனக்குப் பலமான வெறுப்பு        ஏற்பட்டுவிட்டது. மேலும், பால்,
மனிதனுக்கு இயற்கையான   ஆகாரம் அல்ல என்றே எப்பொழுதும்
கருதி வந்திருக்கிறேன். ஆகையால்,        அதை உபயோகிப்பதை
அடியோடு  நிறுத்திவிட்டேன்” என்றேன். அப்பொழுது கஸ்தூரிபாய்
என் படுக்கைக்கு அருகில்         நின்றுகொண்டு நாங்கள் பேசிக்
கொண்டிருந்ததையெல்லாம்           கவனித்துக்கொண்டிருந்தாள்.
“அப்படியானால்,        ஆட்டுப்பால்  சாப்பிடுவதற்கு உங்களுக்கு
எவ்விதமான ஆட்சேபமும் இருப்பதற்கில்லை” என்று  குறுக்கிட்டுச்
சொன்னாள்.

     டாக்டரும் அவள் கூறியதைத்          தொடர்ந்து பிடித்துக்
கொண்டார். “நீங்கள் ஆட்டுப்பால் சாப்பிட்டால் அதுவே  எனக்குப்
போதும்” என்றார், அவர்.

     நானும் உடன்பட்டு விட்டேன். சத்தியாக்கிரகப் போராட்டத்தை
நடத்த வேண்டும் என்று எனக்கு இருந்துவந்த தீவிர ஆர்வம், நான்
உயிரோடிருக்க வேண்டும்      என்ற பலமான ஆசையை என்னுள்
உண்டாக்கிவிட்டது. எனவே, விரதத்தைச்   சொல்லளவில் மாத்திரம்
அனுசரித்துவிட்டு, அதன்          உட்கருத்தை தத்தம் செய்துவிட
என்னையே திருப்தி           செய்து கொண்டேன். நான் விரதம்
எடுத்துக்கொண்டபோது பசுவின் பாலும்    எருமைப் பாலுமே. என்
எண்ணத்தில் இருந்தனவென்றாலும், அதன்