பக்கம் எண் :

அந்த அற்புதக் காட்சி551

Untitled Document
வந்ததும், அந்த            நீண்ட பிரயாணத்தினால் ஏற்படக்கூடிய
அபாயத்திற்கும் துணிவது என்று       முடிவு செய்தேன். அச்சமயம்
பொதுக் கூட்டங்களில் போதிய அளவு      உரக்கப் பேச என்னால்
முடியாது. பொதுக்கூட்டங்களில்       நின்று கொண்டு பேசுவதற்கும்
இயலாது. அந்த நிலைமை எனக்கு   இப்பொழுதும் இருந்து வருகிறது.
நின்று கொண்டு   நீண்ட நேரம் பேச முயல்வேனாயின் என் உடம்பு
முழுவதும் நடுக்கமெடுக்கும்; மூச்சுத் திணறும்.

     தென்னாடு எப்பொழுதுமே    எனக்குச்    சொந்த வீடுபோல்
தோன்றும். தென்னாப்பிரிக்காவில்         நான் செய்த வேலையின்
காரணமாகத் தமிழர்மீதும்    தெலுங்கர்மீதும் எனக்கு ஒருவகையான
தனியுரிமை இருப்பதாகவே நான் உணர்ந்தேன். தென்னாட்டின் நல்ல
மக்கள், என் நம்பிக்கையை        என்றும் பொய்ப்பித்தது இல்லை.
காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காரின்      கையொப்பத்துடன்
அழைப்பு வந்தது. ஆனால்,       அந்த அழைப்புக்கு முக்கியமான
காரணஸ்தராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியாரே என்பதைப் பிறகு
நான் சென்னைக்குப் போகும்        வழியில் தெரிந்துகொண்டேன்.
அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது    அதுவே முதல் தடவை
என்று சொல்லலாம்.       அது எப்படியாயினும், முதல் தடவையாக
ஒருவரையொருவர் நேரில்     அறிந்து கொண்டது அப்பொழுதுதான்.

     காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார் போன்ற   நண்பர்கள்
வற்புறுத்தி அழைத்ததன் பேரிலும்,     பொது வாழ்க்கையில் மேலும்
தீவிரமான பங்கு வகிக்கலாம்          என்ற நோக்கத்தின் பேரிலும்,
அப்பொழுது                  கொஞ்ச காலத்திற்கு முன்னால்தான்
ராஜகோபாலாச்சாரியார் சென்னையில்     வக்கீல் தொழிலை நடத்தச்
சேலத்திலிருந்து வந்திருந்தார். சென்னையில்  அவரோடேயே நாங்கள்
தங்கினோம். ஆனால், அவருடன் இரு தினங்கள்  தங்கியிருந்ததற்குப்
பின்னாலேயே இதை     நான் கண்டுபிடித்தேன். ஏனெனில், நாங்கள்
தங்கியது ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காருக்குச்      சொந்தமான பங்களா
ஆகையால் அவருடைய           விருந்தினராகவே நாங்கள் தங்கி
இருக்கிறோம் என்று எண்ணினேன்.     ஆனால், மகாதேவ தேசாய்
எனக்கு     விஷயத்தை கூறினார். அவர்       வெகு சீக்கிரத்தில்
ராஜகோபாலாச்சாரியாருடன் நெருங்கிய   பழக்கம் கொண்டுவிட்டார்.
ராஜகோபாலாச்சாரியாரோ,         தமது சங்கோஜத் தன்மையினால்
எப்பொழுதும்               பின்னுக்கே இருந்து வந்தார். ஆனால்,
மகாதேவ தேசாய் எனக்கு யோசனை சொன்னார். “இவருடன் நீங்கள்
நெருங்கிய பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் ஒரு
நாள் சொன்னார்.

     அவ்வாறே செய்தேன்.        போராட்டத்தின் திட்டங்களைக்
குறித்துத்       தினமும் சேர்ந்து விவாதித்தோம். ஆனால், பொதுக்