பக்கம் எண் :

ஒரு ஹிமாலயத் தவறு 565

Untitled Document
சைக்கிளில் விளக்கு வைத்துக்கொண்டே வெளியில் போக வேண்டும்
என்ற                 விதியை மீறி நடந்து விடுவதைக் குறித்துக்
கவலைப்படுவதில்லை. இது      சம்பந்தமாக அதிக ஜாக்கிரதையாக
இருக்கும்படி புத்திமதி கூறினால்,          அதையாவது அன்போடு
ஏற்றுக்கொள்ளுவாரா   என்பதும் சந்தேகம். ஆனால், இந்த விதியை
மீறினால்                   குற்றஞ்சாட்டி வழக்குத் தொடரப்படும்
அசௌகரியத்திலிருந்து தப்புவதற்கு மாத்திரம்,     கட்டாயமான இது
போன்ற விதியை           அவர் அனுசரித்து நடப்பார். அவ்விதம்
சட்டத்திற்கு உடன்படுவது, ஒரு சத்தியாக்கிரகி விருப்பத்துடன் தானே
உடன்பட வேண்டியதைப் போன்றது ஆகாது.    ஒரு சத்தியாக்கிரகி,
சமூகத்தின்          சட்டங்களுக்குப் புத்திசாலித்தனமாகவும், தமது
சுயேச்சையான விருப்பத்தின்       பேரிலும் உடன்பட்டு நடக்கிறார்.
ஏனெனில்,     அவ்விதம் செய்வது தமது புனிதமான கடமை என்று
அவர் கருதுகிறார். இவ்விதம்    சமூகத்தின் சட்டங்களுக்கு ஒருவர்
தவறாமல்       பணிந்து நடந்தால்தான், எந்தக் குறிப்பிட்ட விதிகள்
நல்லவை,   நியாயமானவை, எவை அநியாயமானவை, பாவமானவை
என்பதைச்    சீர்தூக்கிப் பார்க்கக் கூடிய தகுதி அவருக்கு ஏற்படும்.
அப்பொழுதுதான் தெளிவான சில குறிப்பிட்ட  சந்தர்ப்பங்களில் சில
சட்டங்களைச் சாத்வீக முறையில்   மீறுவதற்கான உரிமை அவருக்கு
ஏற்படும். அவசியமான இந்த   எல்லையைக் கவனிக்காமல் போனது
தான் நான் செய்த தவறு. இவ்வாறு மக்கள் தங்களைத் தகுதியாக்கிக்
கொள்ளுவதற்கு முன்னால்              சாத்வீகச் சட்ட மறுப்பை
ஆரம்பிக்குமாறு         அவர்களைக் கேட்டுக்கொண்டு விட்டேன்.
இத்தவறு, ஹிமாலயத்தைப்      போன்று பெரியது என்று எனக்குத்
தோன்றுகிறது. கேடா ஜில்லாவில்          பிரவேசித்ததுமே கேடா
சத்தியாக்கிரகத்தைப் பற்றிய   பழைய நினைவுகளெல்லாம் எனக்குத்
திரும்ப வந்தன. எனவே, அவ்வளவு   தெளிவான விஷயத்தை நான்
எப்படிப் புரிந்து கொள்ளாது போனேன் என்று ஆச்சரியப்பட்டேன்.
சாத்விகச்    சட்ட மறுப்பு செய்வதற்கு வேண்டிய தகுதியை மக்கள்
பெறுவதற்கு முன்னால்,         அதன் ஆழ்ந்த உட் பொருள்களை
அவர்கள் முற்றும் அறிந்து கொண்டிருக்க    வேண்டியது அவசியம்
என்பதை நான் தெரிந்துகொண்டேன். எனவே,  பொதுஜன அளவில்
சாத்விகச்   சட்ட மறுப்பைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு முன்னால்
நன்றாகப் பண்பட்ட,            சத்தியாக்கிரகத்தின் கண்டிப்பான
நிபந்தனைகளை   நன்றாகப் புரிந்துகொண்டிருக்கும், புனித உள்ளம்
படைத்த தொண்டர்கள் படை இருக்கும்படி      செய்யவேண்டியது
அவசியம். அவைகளை அவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லவும்,
தூக்கமின்றி       உஷாராக இருப்பதன் மூலம் மக்களைச் சரியான
வழியில் நடக்கும்படி செய்யவும் அவர்களால் முடியும்.